160,000 சிங்கப்பூரர்களுக்கு $100 மளிகைப்பொருள் பற்றுச்சீட்டு; அடுத்த மாதம் கிடைக்கும்

2 mins read
a7f582d4-970b-4ff5-a466-8a7d7b3d91b9
-

கொவிட்-19 தொற்றுச் சூழ­லில் குடும்­பச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க உத­வும் வகை யில், தகு­தி­பெ­றும் ஏறத்­தாழ 160,000 சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அடுத்த மாதம் $100 மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்டு கொடுக்­கப்­படும்.

இந்த உதவி, சென்ற ஆண்­டில் அறி­விக்­கப்­பட்ட கருணை, ஆத­ர­வுத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இடம்­பெ­று­கிறது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் ஓரறை மற்­றும் ஈரறை வீடு­களில் வசிக்­கின்ற, ஒன்­றுக்­கும் அதிக வீடு­க­ளைக் கொண்டிராத, இந்த ஆண்டு 21 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வருக்­கும் அந்­தப் பற்­றுச்­சீட்டு கிடைக்­கும் என்று நிதி அமைச்சு நேற்று அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

மளி­கைப்பொருள் பற்­றுச்­சீட்­டுத் திட்டம் மொத்­தம் ஏறத்­தாழ $63 மில்­லி­யன் மதிப்புள்ள உத­வி­களைத் தகுதி உள்­ள­வர்­க­ளுக்கு வழங்­கு­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­கள், சென்ற ஆண்டு $300 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­களைப் பெற்­ற­னர்.

இந்த ஆண்டு பற்­றுச்­சீட்­டு­கள் அக்­டோ­பர் 2ஆம் தேதி முதல் அடுத்த மாதம் முழு­வ­தும் சனிக்­கி­ழ­மை­களில் தகுதி உள்ள குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

அந்­தப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்தி ஜயண்ட் ஃபேர்பி­ரைஸ், பிரைம் சூப்­பர் மார்­கெட், ஷெங் சியோங் ஆகியவை உள்ளிட்ட பேரங்­காடி­களில் மளி­கைப்­பொ­ருட்­களை வாங்­க­லாம்.

மளிகைப் பற்­றுச்­சீட்­டு­கள் சென்ற ஆண்டு வீவக புளோக்­கு­களில் இருக்­கும் அஞ்சல் பெட்­டி­களில் சேர்க்­கப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­பட்­டன. அதில் பல பிரச்­சினை­கள் ஏற்­பட்­டன. ஆகை­யால் இந்த ஆண்டு பற்­றுச்­சீட்­டு­கள் வீடு­க­ளுக்கே நேர­டி­யா­கக் கொடுக்­கப்­படும்.

எடுத்­துக்­காட்­டாக, சைனா டவுன், குவீன்ஸ்­ட­வுன், புக்­கிட் மேரா ஆகிய பகுதி­களில் உள்ள தகு­தி­பெ­றும் குடும்­பங்­களுக்கு அக்­டோ­பர் 2ஆம் தேதி நேர­டி­யாகப் பற்­றுச்­சீட்­டு­கள் விநி­யோ­கிக்­கப்­படும்.

வீட்­டில் அப்­போது யாரும் இல்லை என்றால் அக்­டோ­பர் 4ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் 8ஆம் தேதிக்­கும் இடை­யில் பற்றுச்­சீட்­டு­க­ளைக் கொடுக்க மேலும் ஒரு முயற்சி இடம்­பெ­றும்.

அப்­போ­தும் அதைப் பெற்­றுக்­கொள்ள வீட்­டில் யாரும் இல்லை என்­றால் வீட்­டில் ஓர் அறி­விப்பு அட்டை வைக்­கப்­படும்.

அதில் குறிப்­பி­டப்­படும் அஞ்­சல் அலு­வ­ல­கத்­தில், 10 வேலை நாட்­க­ளுக்­குள் பற்­றுச்­சீட்­டைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.