விபத்து: 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்

விபத்து: 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்

1 mins read
c83be583-a3dc-4bfb-ad96-956c6e7b8765
தீவு விரைவுச் சாலையில் நேற்று விபத்து நிகழ்ந்தது. படங்கள்: ஃபேஸ்புக் -

தீவு விரைச்­சா­லை­யில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்­தில் ஏழு வாக­னங்­கள் சேத­ம­டைந்­தன.

ஒரு கன­ரக வாக­னம், மூன்று லாரி­கள், ஒரு மோட்­டார் சைக்­கிள், இரண்டு கார்­கள் ஆகி­யவை ஒன்­றோடு ஒன்று மோதிக்­கொண்­டன.

சாங்கி விமான நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும் தீவு விரை­வுச்­சா­லை­யில் ஜாலான் யூனோ­சுக்கு வெளி­யே­றும் நுழை­வா­யி­லுக்கு முன்­ன­தாக விபத்து நிகழ்ந்­தது.

விபத்­தில் சிக்­கிய பத்துப் பேர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். 25 வயது லாரி ஓட்­டு­நர், 24 வயது மோட்­டார்சைக்­கிள் ஓட்­டு­நர், மூன்று லாரி­களில் பய­ணம் செய்­து­கொண்டி­ருந்த எட்டுப் பய­ணி­கள் ஆகி­யோரை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­போது அவர்­கள் சுய­நி­னை­வு­டன் இருந்­த­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மூவர் மறுத்­து­விட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அவர்­க­ளுக்கு இலே­சான காயங்­கள் மட்­டுமே ஏற்­பட்­டி­ருந்­த­தா­க­வும் சம்­பவ இடத்­தி­லேயே அவர்­க­ளுக்கு முத­லு­தவி வழங்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்துக் குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.