நால்வர் கைது; $328,000 மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வி­னர் கடந்த வார­யி­று­தி­யில் மேற்­கொண்ட திடீர் சோத­னை­களில் கிட்­டத்­தட்ட $328,000 மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ளைக் கைப்­பற்­றி­ய­து­டன், நான்கு பேரைக் கைதுசெய்­துள்­ள­னர்.

பிடி­பட்ட போதைப்­பொ­ரு­ளில் 4,342 கிராம் ஹெராயி­னும் அடங்­கும் என்­றும் 2,070 போதைப் பொருள் புழங்­கி­கள் ஒரு வாரத்­துக்­குப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அது போது­மா­னது என்­றும் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்றைய அறிக்­கை­யில் கூறியது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் மூவர் 45 வய­துக்­கும் 57 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்­கப்­பூர் ஆட­வர்­கள். அவர்­க­ளு­டன் 37 வயது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான பெண் ஒரு­வ­ரும் கைது­செய்­யப்­பட்­டார்.

மொத்­தம் ஐந்து இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­டது. அவற்­றில் 191 கிராம் 'ஐஸ்' போதைப்­பொ­ருள், 15 கிராம் கஞ்சா, 207 கிராம் அள­வி­லான எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள், 142 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள், 10 எல்­எஸ்டி முத்­தி­ரை­கள் ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர்.

கடந்த சனிக்­கி­ழமை இரவு கேலாங்­கில் உள்ள சிம்ஸ் அவென்­யூ­வில் ஒரு வாக­னத்­தைத் தடுத்து, 45 வயது, 51 வய­துள்ள இரண்டு ஆட­வர்­க­ளைக் கைது செய்­த­து­டன் காரி­லி­ருந்து ஒரு கிலோ­வுக்கு மேற்­பட்ட ஹெராயின் உட்­பட பல போதைப்­பொ­ருட்­க­ளைக் கைப்­பற்­றி­னர். காலாங் அவென்­யூ­வில் உள்ள ஒரு கிடங்கு, ரிவர் வேலி­யில் உள்ள கிம் யாம் ரோட்டில் ஓர் இடம், ஆங்கர்­வேல் லேனில் உள்ள ஒரு வீடு ஆகி­ய­வற்­றி­லும் பின்­னர் போதைப்­பொ­ருட்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. கிம் யாம் ரோட்டில் நிரந்­த­ர­வாசி பெண் கைதா­னார்.

அத்­து­டன் சனிக்­கி­ழமை மாலை பொங்­கோ­லில் உள்ள சுமாங் வாக்­கில் உள்ள வீட்­டில் போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் திடீர் சோதனை நடத்­தி­னர். அதி­கா­ரி­கள் கட்­டா­யப்­ப­டுத்தி கத­வைத் திறக்க வேண்­டி­ய­தா­யிற்று என்று அறிக்கை தெரி­வித்­தது.

அங்கு 2,392 கிராம் போதைப் பொருள் உள்ள எட்­டுப் பொட்­ட­லங்களும் மேலும் பல போதைப் பொருட்­களும் பிடி­பட்­டதுடன் 57 வயது ஆட­வர் கைதா­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!