சிங்கப்பூர் - மலேசியா இடையே கைபேசி மூலம் உடனுக்கு உடன் பணப் பரிவர்த்தனை

1 mins read
1a727953-030f-4f08-b99a-d7d818e9e8dc
-

சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சி­யா­வி­லும் உள்­ள­வர்­கள் தங்­கள் கைப்­பே­சி­யின் மூலம் அடுத்த ஆண்டு இறு­திக்­குள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உட­னு­டக்கு உடன் பணப்பரிவர்த்தனை செய்­ய­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் பேங்க் நெகாரா மலே­சி­யா­வும் நேற்று கூட்­டாக அதனை அறி­வித்­தன.

சிங்­கப்­பூ­ரின் பேநவ் கட்­ட­ண­மு­றை­யும் மலே­சி­யா­வின் டுவெட்­நவ் கட்­ட­ண­மு­றை­யும் கட்­டம் கட்­ட­மாக இணைக்­கப்­ப­டு­வ­தாக இரு மத்­திய வங்­கி­களும் கூறின.

இத்­திட்­டத்­தில் பங்­கு­பெ­றும் நிதி நிறு­வ­னங்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே உட­னுக்கு உடன் பண­ப்பரிவர்த்தனை செய்­து­­கொள்­ள­லாம். அதற்கு கைபேசி எண் இருந்­தால் போதும்.

மேலும், இதில் கடை­களில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் நெட்ஸ் அல்­லது மலே­சி­யா­வின் டுவெட்நவ் கியூ­ஆர் குறி­யீ­டு­களை வருடி, கட்­ட­ணங்­க­ளைச் செலுத்­த­லாம்.

இரண்டு நாட்­டுப் பய­ணி­களும் கட்­ட­ணம் செலுத்­து­வதை இத்­திட்­டம் எளி­தாக்­கும் என்று கரு­தப் ­ப­டு­கிறது.

பெருந்­தொற்­றுக்கு முன்­ன­தாக, சிங்­கப்­பூ­ருக்கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 12 மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­த­னர் என்­றது அறிக்கை. தாய்­லாந்து, இந்­தியா ஆகி­ய­வற்­று­டன் சிங்கப்பூர் ஏற்­கெ­னவே இத்­த­கைய திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.