ஏமாற்றி முகக்கவசங்கள் பெற்றவர்களுக்கு சிறை

ஏமாற்றி முகக்கவசங்கள் பெற்றவர்களுக்கு சிறை

1 mins read
d775bbc4-5429-4272-9029-9b8f195c4597
-

சட்டத்துக்குப் புறம்பாக அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி, தெமாசெக் நிறுவனம் வழங்கிய இலவச முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்ட இருவருக்கு இரண்டு வெவ்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டான் அண்ட் யிக் கிளினிக் எனும் மருந்தகத்தில் உதவியாளராப் பணியாற்றிய ஆங் போ லே, 47, மருந்தக நோயாளிகள் 26 பேரின் விவரங்களைக் கொண்டு முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு ஒன்பது வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

புராப்நெக்ஸ் நிறுவனத்தில் சொத்து முகவராக இருந்த டேவிட் சின் சிங் சுயின், 58, தமது வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பயன்படுத்தி இலவச முகக்கவசங்களைப் பெற்றார். அவருக்கு ஒரு வாரச் சிறை விதிக்கப்பட்டது.