ஏழாவது நாளாக 1000க்கு மேல் பதிவான கொவிட்-19 பாதிப்பு

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்தினம் புதி­தாக 1,647 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. இத­னை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த பாதிப்பு 89,539ஆக உயர்ந்­தது.

புதி­தாக கொரோனா தொற்றி­யோ­ரில் 1,280 பேர் சமூ­கத்­தில் இருப்­போர்; 362 பேர் தங்­கு­விடுதி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள். அத்­து­டன், வெளி­நா­டு­களில் இருந்து வந்­தோரி டையே பாதிப்­பு­ எண்ணிக்கை ஐந்தாக இருந்தது.

தொடர்ந்து ஏழா­வது நாளாக ஆயி­ரத்­திற்­கு­மேல் கிரு­மித்­தொற்று பாதிப்பு பதி­வா­கி­யி­ருக்­கிறது.

கொரோனா தொற்­றிய 80 வய­துப் பெண்­ம­ணி­யும் 74 வயது ஆட­வ­ரும் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இரு­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­போ­தும் அவர்­க­ளுக்கு வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­களும் இருந்­தன.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் கொரோ­னா­வால் மாண்­டோர் எண்­ணிக்கை 80ஐ எட்­டி­விட்­டது. கடந்த ஆகஸ்ட்­டில் 18 பேரும் இம்­மா­தத்­தில் இது­வரை 25 பேரும் கொரோனா தொற்று கார­ண­மாக மாண்­டு­போ­யி­னர்.

நேற்று பதி­வான சமூக பாதிப்பு­களில் 335 பேர், 60 வய­தைக் கடந்­த­வர்­கள்.

இத­னி­டையே, பாசிர் பாஞ்­சாங் மொத்த விற்­ப­னைச் சந்தை கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 82ஆக உயர்ந்­து­விட்­டது. அவர்­களில் 76 பேர் சந்­தை­யில் பணி­யாற்­று­வோர், மூவர் வணிக வரு­கை­யா­ளர்­கள். எஞ்­சிய மூவ­ரும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­கள்.

அது­போல, பிடோக்­கில் உள்ள 'லேர்ன்­ஜாய்' துணைப்­பா­டக் கல்வி நிலைய கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 18ஆக­வும் ஈசூ­னில் உள்ள 'மை லிட்­டில் கேம்­பஸ்' பாலர் பள்­ளி­யில் 47ஆக­வும் கூடி­விட்­டது.

இப்­போது கொவிட்-19 நோயாளி­கள் 1,288 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அவர்­களில் 194 பேர்க்­குச் செயற்கை உயிர்­வாயு தேவைப்­ப­டு­கிறது.

27 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். நேற்று முன்­தி­னம் இந்த எண்­ணிக்கை 30ஆக இருந்­தது.

உடல்­நிலை மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ரில் 185 பேர் 60 வய­திற்கு மேற்­பட்­டோர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!