தடை­காப்பு உத்­த­ர­விலுள்ள 'பிஎஸ்எல்இ' எழுதுவோர் 12 மணிக்குள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்

தடை­காப்பு உத்­த­ர­விலுள்ள 'பிஎஸ்எல்இ' எழுதுவோர் 12 மணிக்குள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்

2 mins read
41b3cc83-e578-4d15-bd56-d14e7cd29aed
-

தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்டு தேர்­வு­கள் நாளை தொடங்­கு­கின்றன.

கொவிட்-19 தடை­காப்பு உத்­த­ர­வின்­கீழ் தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக்­கொண்டு வரும் மாண­வர்­கள், விரும்­பி­னால் தேசிய தேர்­வு­களை எழு­த­லாம் என்று கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­க­மும் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

அத­னை­ய­டுத்து மாண­வர்­கள் நிறை­வேற்ற வேண்­டிய சில குறிப்­பிட்ட கடு­மை­யான நிபந்­த­னை­கள் பற்­றிய விவ­ரங்­கள் நேற்று அறி­விக்­கப்­பட்­டன.

மாண­வர்­க­ளுக்­குத் தடை­காப்பு உத்­த­ரவு விதிக்­கப்­பட்ட நாள் மதி­யம் 12 மணிக்­குள் அவர்­கள் பள்ளிக்­குத் தக­வல் தெரி­விக்க வேண்­டும்.

மேலும் ஒவ்­வொரு தேர்­வுக்கு முன்­தி­ன­மும் மாலை ஆறு மணிக்கு, மாண­வர்­கள் ஏஆர்டி விரை­வுப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்டும்.

தடை­காப்பு உத்­த­ரவு விதிக்­கப்­பட்ட மாண­வர்­கள், தங்­கள் வீட்டிற்கு 'செர்­டிஸ்' அதி­கா­ரி­கள் வரும் வரை காத்­தி­ருந்து அவர்­கள் வந்த பிற­கு­தான் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்­டும்.

'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடி­வு­கள் வெளி­வர குறைந்­தது 24 மணி நேர­மா­வது ஆகும் என்­றும் இதனால், முடி­வு­கள் வெளி­வந்து குறைந்­தது இரண்டு நாட்­க­ளுக்­குப் பிறகே, மாண­வர்­க­ளால் தேர்வு எழுத இய­லும் என்­றும் அறிக்கை குறிப்­பிட்­டது.

தேர்வு நாள் அன்று மாண­வர்­களுக்­குத் தடை­காப்பு உத்­த­ரவு பிறக்­கப்­பிக்­கப்­பட்­டால், அவர்­க­ளால் அந்­தத் தேர்வை எழுத முடி­யாது. ஆயி­னும், தங்­கள் பள்ளி மூலம் சிறப்­புப் பரி­சீ­ல­னைக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

சிறப்­புப் பரி­சீ­ல­னை­யின்கீழ் மாண­வர்­கள், அந்­தப் பாடத்­தின் மற்ற தேர்­வு­களில் பெற்­றுள்ள மதிப்­பீ­டு­கள், அப்­பள்­ளி­யைச் சார்ந்த அவ்­வாண்டு தேசிய தேர்­வெ­ழு­தும் ஒட்­டு­மொத்த மாண­வர்­க­ளின் மதிப்­பீ­டு­கள் போன்­ற­வற்­றைக் கருத்­தில் கொண்டு, தேர்வு எழுத இய­லாத மாண­வர்­க­ளுக்கு மதிப்­பீடு வழங்­கப்­படும்.

மாண­வர்­க­ளுக்­குத் தேவைப்­படும் 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கரு­வி­களை 'செர்­டிஸ்' அதி­கா­ரி­கள் வழங்­கு­வர் என்­றும் 'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடி­வு­கள் இணை­யம் வழி, 'ஹெல்த்­ஹப்' செயலி வழி அல்­லது குறுஞ்­செய்தி வழி தெரி­விக்­கப்­படும் என்றும் அறி­க்கை­யில் கூறப்­பட்­டது.

'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யில் நோய்த்­தொற்று இல்லை என்­பது உறு­தி­செய்­யப்­பட்­டால் அன்று மாலை மாண­வர்­கள் 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும். பின், 'ஏஆர்டி' பரி­சோ­தனை முடி­வைப் படம் பிடித்து வைத்­துக்­கொள்ள வேண்­டும்.

தேர்வு நாளன்று மாண­வர்­கள் 'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடி­வை­யும் 'ஏஆர்டி' பரி­சோ­தனை முடி­வின் படத்­தை­யும் காண்­பிக்க வேண்­டும்.

தடை­காப்பு உத்­த­ரவு பிறக்­கப்­பிக்­கப்­பட்ட மாண­வர்­கள் தொடந்து வீட்­டில் 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­களைச் செய்­து­கொள்ள வேண்­டும்.

இதே நிபந்­த­னை­க­ளைப் பூர்த்­தி செய்த பெற்­றோர் தங்­க­ளது பிள்­ளை­க­ளுக்­குத் துணை­யா­கச் செல்­ல­லாம் என்­றும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

நோய்த்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­வர்­கள் அல்­லது வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறக்­கப்­பிக்­கப்­பட்­ட­வர்­கள் இந்த ஆண்டு தேர்­வு­ எ­ழுத அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று கல்வி அமைச்­சு, சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­க­அறிக்­கை­யில் விவரிக்கப்பட்டது.