கிட்டத்தட்ட 1.13 மில்லியன் குடும்பங்கள் இலவச முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டன; விநியோகம் நீட்டிப்பு

2 mins read
ca8e9995-a37e-42e1-8e1e-41c29957bdb7
குடும்­பங்­கள் தலா 50 மருத்­து­வத்­தர முகக்­க­வ­சங்­க­ளை­யும் 25 'என்95' ரக முகக்­க­வசங்­க­ளை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் -

தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் இல­வச முகக்­க­வச விநி­யோ­கம் செப்­டம்­டர் 26 ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று அதி­கா­ர­பூர்­வ­மாக முடி­வுற்­றது. ஆயி­னும் இச்­சே­வையை அந்­நி­று­வ­னம் மேலும் ஒரு வாரத்­துக்கு நீட்­டித்­துள்­ளது.

மக்­கள், பங்­கு­பெ­றும் 15 'கேபிட்­ட­லேண்ட்' பேரங்­கா­டி­க­ளி­லி­ருந்து இல­வச முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். இது­வரை 1.13 மில்­லி­யன் குடும்­பங்­கள் இல­வச முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளன.

பேரங்­கா­டி­க­ளின் தக­வல் நிலை­யங்­க­ளுக்­குச் சென்று, தங்­க­ளது 'சிங்­கப்­பூர் பவர்' கட்­ட­ணப் பட்­டி­ய­லைக் காண்­பித்து இல­வச முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று தெமா­செக் ஹொல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி பொறுப்­பி­லி­ருந்து வெளி­யே­றும் திரு­வாட்டி ஹோ சிங் கூறி­னார்.

ஐந்­தாம் முறை­யாக நடை­பெ­றும் இவ்­வி­நி­யோ­கச் சேவை­யில் குடும்­பங்­கள் 50 மருத்­து­வத்­தர முகக்­க­வ­சங்­க­ளை­யும் 25 'என்95' ரக முகக்­க­வசங்­க­ளை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

எளி­தில் பர­வக்­கூ­டிய டெல்டா வகை கிரு­மி­யைக் கருத்­தில் கொண்டு, முதன்முறை­யாக மருத்­து­வத்­தர முகக்­க­வங்­க­ளை­யும் தெமா­செக் அற­நி­று­வ­னம் வழங்­கு­கிறது. இவற்­றைத் தேர்வு செய்­யப்­பட்ட 'கேபிட்­ட­லேண்ட்' பேரங்­கா­டி­க­ளி­லி­ருந்­தும் பேரங்­கா­டி­க­ளி­லி­ருந்­தும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இந்த ஒரு­மா­தக் கால விநி­யோ­கம் ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்­கி­ய­போது, அதே நாளில் 100,000க்கும் மேற்­பட்ட முகக் கவ­சங்­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

விநி­யோ­கம் தொடங்­கு­வ­தற்கு ஒரு மணி நேரத்­துக்கு மேல் மக்­கள் சில கடைத்­தொ­கு­தி­களில் வரி­சை­யில் காத்­தி­ருந்து அவற்­றைப் பெற்­றுச் சென்­ற­னர்.

அவ்­வப்­போது விநி­யோக நிலை­யங்­களில் முகக்­க­வ­சங்­கள் தீர்ந்­து­போ­னா­லும், போதிய முகக்­க­வ­சங்­கள் இருப்­ப­தா­க­வும் மக்­கள் மறு­நாள் வந்து அவற்­றைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்­றும் தெமா­செக் அற­நி­று­வ­னம் கூறி­யுள்­ளது.

130 விநி­யோக நிலை­யங்­களில் தங்­க­ளுக்கு அரு­கில் உள்ள எந்த இடத்­தில் இல­வச முகக்­க­வ­சங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்ற விவ­ரத்தை மக்­கள் https://stayprepared.sg/staymasked/onetime/ என்ற இணை­யத் தளத்­தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெமாசெக் அறநிறுவனம் கூறியது.