வெளிநாட்டுத் தலையீடு: நகல் சட்டம் குறித்து ஃபேஸ்புக்

வெளிநாட்டுத் தலையீடு: நகல் சட்டம் குறித்து ஃபேஸ்புக்

1 mins read
a2de1986-7b3d-4e89-b2f8-b5db2935e40b
-

வெளி­நாட்­டுத் தலை­யீட்டை எதிர்­கொள்ள சிங்­கப்­பூ­ரின் நகல் சட்­டம் பொதுப்­ப­டை­யாக வரை­யப்­பட்டுள்­ள­தாக ஃபேஸ்புக் நிறு­வனம் கூறி­யுள்­ளது. மற்ற பதி­வு­களி­லி­ருந்து எவ்­வாறு எதிர்ப்பு உணர்­வைத் தூண்­டும் பிர­சா­ரங்­களை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அடை­யா­ளம் காணும் என்­ப­தைக் கவ­னிக்­கப்­போ­வ­தாக ஃபேஸ்புக் சொன்­னது.

எனி­னும், இதன் தொடர்பில் தனது நிறு­வ­ன­மும் சிங்­கப்­பூர் அர­சாங்­க­மும் ஒரே இலக்கை நோக்­கித்­தான் சென்­று­கொண்­டி­ருப்­ப­தாக ஃபேஸ்புக்­கின் இணை­யப் பாது­காப்­புக் கொள்­கைப் பிரிவின் தலை­வர் திரு நேத்தனியல் கிளைக்­கர் வலி­யுறுத்­தி­னார். வெளிநாட்டுத் தலை­யீடு, அதி­லும் குறிப்­பாக மறை­மு­க­மாக மக்­களை மனம் மாற­வைக்­கும் நடவ­டிக்­கை­கள் தனது தளத்­தில் இடம்­பெ­று­வதை ஃபேஸ்புக் விரும்­ப­வில்லை என்று அவர் கூறி­னார். 'ஃபிக்கா' எனப்­படும் வெளி­நாட்­டுத் தலை­யீட்­டுக்கு எதி­ரான நகல் சட்­டம் இம்­மா­தம் 13ஆம் தேதி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.