‘கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்த நிறுவனங்கள் தெளிவான திட்டங்களை வரையவேண்டும்’

வருங்­கா­லத்­தில் உல­கின் வெப்பத்தை அதி­க­ரிக்­கும் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் நிறுத்­தும் இலக்­கைப் பல நிறு­வ­னங்­கள் கொண்­டுள்­ளன. ஆனால் இலக்கை அடைய வகை­செய்­யும் தெளி­வான திட்­டங்­களை ஒரு­சில நிறு­வ­னங்­கள்­தான் வரைந்­தி­ருப்­ப­தாக உணவு, வேளாண் நிறு­வ­ன­மான 'ஓலம் இன்­டர்­நே­ஷ­னல்' தலைமை நிர்­வாகி சனி வர்­கீஸ் 'ஈக்­கோஸ்­பெ­ரிட்டி' மாநாட்­டில் குறிப்­பிட்­டார்.

மாநாட்­டில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் அவர் இதைச் சொன்­னார்.

கிட்­டத்­தட்ட இரண்டு நாட்­களுக்கு ஒரு முறை பரு­வ­நிலை மாற்­றத்­தின் தொடர்­பில் மாநா­டு­கள் நடை­பெ­று­கின்­றன. ஆனால் அதன் தொடர்­பில் வர்த்­த­கங்­கள் எதிர்­கொள்­ளும் சிர­மங்­க­ளைப் பற்றி எந்த மாநா­டும் ஆராய்­வ­தில்லை என்று அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

பரு­வ­நிலை மாற்­றம் விடுக்­கும் அபா­யங்­க­ளைக் கையாண்ட வண்­ணம் கொவிட்-19 கொள்ளை நோய்ப் பர­வல் சூழ­லி­லி­ருந்து மீண்டு­வ­ரும் முயற்­சி­யில் நாடு­கள் ஈடு­பட்­டுள்­ளன. அந்த வகை­யில் கடந்த ஈராண்­டு­களில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை அறவே நிறுத்­தும் இலக்­கைக் கொண்­டுள்ள நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் இத்­த­கைய இலக்­கு­களை அடைய நிறு­வ­னங்­கள் எடுக்­கும் பாதை­யில் பல இடை­யூ­று­கள் இருப்­ப­தைத் திரு வர்­கீஸ் சுட்­டி­னார்.

மூன்று நாட்­கள் நடை­பெ­றும் 'ஈக்­கோஸ்­பெ­ரிட்டி' மாநாடு நேற்று தொடங்கியது. நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுச்­சூ­ழல் தொடர்­பிலான அம்சங்­க­ள் மாநாட்டில் அலசி ஆராயப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!