விபத்தில் 76 வயது ஓட்டுநர் மரணம்

விபத்தில் 76 வயது ஓட்டுநர் மரணம்

1 mins read
b614142b-f03a-42b6-b256-554dd0265436
-

வெஸ்ட் கோஸ்ட் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 76 வயது ஆடவர் மாண்டார். அவர் ஓட்டிய கனரக 'டேங்கர்' லாரி 301 வெஸ்ட் கோஸ்ட் சாலையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மோதியதால் விபத்து நேர்ந்தது.

நேற்று முன்தினம் மாலை சுமார் 6.12 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் வந்ததாக போலிசார் தெரிவித்தனர். நினைவிழந்த நிலையில் இருந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலிசார் கூறினர். பேருந்து நிறுத்தத்தில் நான்கிலிருந்து ஐந்து பேர் இருந்ததாகவும் விபத்து நேர்ந்தபோது அவர்கள் அருகிலிருந்த கட்டடங்களுக்கு வேகமாகச் சென்றதாகவும் விபத்தைப் பார்த்த ஒருவர் சொன்னார்.