வாகனத்தின் கண்ணாடியை உடைத்த ஆடவர்

வாகனத்தின் கண்ணாடியை உடைத்த ஆடவர்

1 mins read
f018c395-02fc-474e-a3b0-2edaf63b89a0
கடந்த ஞாயிற்றுக்கிழமைபின்னிரவுஒரு மணிக்கு பாயலேபாரில் சம்பவம் நிகழ்ந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

பாய லேபா­ரில் ஆட­வர் ஒரு­வர் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னத்­தின் கண்­ணா­டியை உடைத்­தி­ருக்­கி­றார். இச்­சம்­ப­வம் கடந்த ஞாயிற்­றுக்­கிழமை பின்னிரவு சுமார் ஒரு மணிக்கு நிகழ்ந்­தது.

கண்­ணாடி உடைக்­கப்­பட்ட வாக­னத்­திற்­குச் சொந்­தக்­கா­ரர் 'அம­ரோன் கார் பேட்­ட­ரீஸ்' நிறு­வ­னத்­தில் விளம்­பர நிர்­வா­கி­யாக வேலை செய்­யும் 27 வயது ஆட­வர். வாக­னத்­தின் கண்­ணா­டி­யில் பெரிய துவா­ரம் இருப்­ப­தைக் கண்­ட­வு­டன் ஆச்­ச­ரி­யம் அடைந்­த­தாக அவர் கூறி­னார். இப்­ப­டிப்­பட்ட ஒரு சம்­பவம் இதற்கு முன் தனக்கு நேர்ந்ததில்லை என்று அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

வாக­னத்­திற்­குள் பொருத்­தப்­பட்டி­ருக்­கும் கேம­ரா­வில் கண்ணாடி உடைக்­கப்­பட்­டது பதி­வா­னது. 'சுபாரு' வாக­னம் ஒன்று இந்த வாக­னத்­திற்கு அருகே நிறுத்­தப்­பட்­ட­தும், அதி­லி­ருந்து ஆட­வர் ஒரு­வர் வெளியே வந்து கண்­ணாடியை உடைத்­த­தும் கேம­ரா­வில் பதி­வா­னது. ஆனால் ஆடவரின் உருவமும் சம்பவமும் தெளி­வா­கப் பதி­வா­க­வில்லை.

சேதத்­தைப் பார்க்­கும்­போது ஆட­வர் கோட­ரி­யைப் பயன்­ப­டுத்தி­யி­ருப்­பது போல் தெரி­வ­தாக உடைக்­கப்­பட்ட வாக­னத்­தின் சொந்­தக்­கா­ரர் கூறி­னார். தாக்கி ­ய­வ­ருக்கு உள்­நோக்­கம் ஏதும் இல்லை எனத் தான் நம்­பு­வதாகவும் அவர் உண்­மை­யி­லேயே வேறொ­ரு­வ­ருக்­குக் குறி­வைத்­திருக்­க­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

சம்­ப­வம் குறித்து நேற்று முன்­தி­னம் காலை சுமார் 8.20 மணிக்­குத் தங்களுக்குத் தக­வல் வந்­த­தாக போலி­சார் தெரி­வித்­த­னர். விசா­ரணை நடந்­து­வ­ரு­கிறது.