செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
eaadf4d6-85c5-4665-90d8-c3ea8ae5480e
-

போலி தடுப்பூசி சான்றிதழைக் காட்­டி­ய­வ­ருக்­குச் சிறை

கைபேசிச் செய­லி­யைப் பயன்­ப­டுத்தி தமது சக ஊழி­ய­ரின் தடுப்­பூசி சான்றிதழை சீனா­வைச் சேர்ந்த 30வயது ஷாங் ஷாவ்­பெங் மாற்­றி­ய­மைத்­தார். மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட சான்றிதழின் மின்­னி­லக்க வடி­வத்­தைக் கொண்டு ஆர்ச்சர்ட் சாலை­யில் உள்ள 'டனுக்கி ரார்' உண­வ­கத்­திற்­குள் ஷாங் நுழைய முயன்­றார். ஷாங்­கு­டைய தடுப்­பூசி சான்றிதழின் இருந்த அடை­யாள எண்­ணும் அவ­ரு­டன் இருந்த ஒரு­வ­ரு­டைய தடுப்­பூசி சான்றிதழில் இருந்த அடை­யாள எண்­ணும் ஒரே மாதிரி இருந்­தன. சான்றிதழ் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் எனச் சந்­தேகித்த உண­வக

ஊழி­யர்­கள், அங்கி­ருந்து கிளம்­பு­மாறு அவ­ரி­டம் கூறி­னர். அதற்­குப் பிறகு அச்­சம்­ப­வம் குறித்து போலி­சா­ரி­டம் தக­வல்

தெரி­விக்­கப்பட்­டது. குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட ஷாங்­கிற்கு நேற்று மூன்று வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இவ்­வ­கை­யான குற்றம் புரிந்து, தண்­டனை வழங்­கப்­பட்ட முதல் நபர் இவரே.

நோய்த்தொற்று கட்டுப்பாடுகளை மீறிய நிறுவனங்களுக்கு அபராதம்

சீனப் பெருநாளுக்கு முந்தைய வார இறுதியில் ஓர் உணவகத்தில் 65 ஊழியர்கள் ஒன்றுகூடி, பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறினர்.

'ஏசியா பைலிங் கோ' கட்டுமான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்விருந்து நிகழ்ச்சி டர்ஃப் சிட்டியிலுள்ள 'ஆ யாட் சீஃபூட்' உணவகத்தில், பிப்ரவரி 6ஆம் தேதி நடந்தது.

நேற்று 'ஏசியா பைலிங்' நிறுவனத்துக்கும் 'ஆ யாட் எபலோன் ஃபாரம் ரெஸ்ட்டாரன்ட் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்திற்கும் தலா $6,500 அபராதம் விதிக்கப்பட்டது.