கொவிட்-19 தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு

கொவிட்-19 தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு

2 mins read
60e817fb-eddb-47a4-bc50-9e00143c8a3a
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக 69 முதல் 79 வய­திற்­குட்­பட்ட ஆட­வர் நால்­வ­ரும் 77 வய­தான பெண் ஒரு­வ­ரு­மாக மேலும் ஐவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

அந்த ஐவ­ரில் இரு­வர் முழு­மை­யா­க­வும் ஒரு­வர் பகு­தி­ய­ள­வும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள். மற்ற இரு­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.

அவர்­கள் ஐவர்க்­கும் வேறு உடல்­ந­லக் குறை­பா­டு­களும் இருந்­த­தா­க சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

தொடர்ந்து ஒன்­ப­தா­வது நாளாக சிங்­கப்­பூ­ரில் கொரோனா தொற்­றால் உயி­ரி­ழப்பு பதி­வா­கி­உள்­ளது. இது­வரை 85 பேர் அந்­நோய்த்­தொற்­றால் மாண்­டு­விட்டனர்.

குறிப்­பாக, சென்ற மாதத்­தில் 18 பேரும் இம்­மா­தத்­தில் இது­வரை 30 பேரும் கொரோ­னா­வால்­உயி­ரிழந்துவிட்டனர்.

இத­னி­டையே, ஒரு­நாள் பாதிப்பு முதன்­மு­றை­யாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஈரா­யி­ரத்­தைக் கடந்­தது. புதி­தாக 2,236 பேர்க்கு கொரோனா தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்­டது.

முந்­திய நாள் பாதிப்­பைக் காட்டி­லும் இது 589 அதி­கம். இத­னை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 91,775 ஆனது.

புதி­தாக பாதிக்­கப்­பட்­டோ­ரில் 1,711 பேர் சமூ­கத்­தி­னர்; 515 பேர் தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள். அத்­து­டன், வெளி­நாட்­டில் இருந்து வந்த பத்­துப் பேர்க்­கும் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

உள்­ளூ­ரில் தொற்று கண்­டோ­ரில் 483 பேர் 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள்.

ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள புளூ ஸ்டார்ஸ் தங்­கு­வி­டுதி தொற்றுக் குழு­மத்­தில் மேலும் 20 பேரை கொரோனா தொற்ற, அக்­கு­ழு­மத்­தில் கிருமிப் பாதிப்பு எண்ணிக்கை 401ஆக உயர்ந்­தது.

அது­போல், உட்­லண்ட்ஸ் தங்கு­வி­டுதி தொற்­றுக் குழு­மத்­தி­லும் புதி­தாக 40 பேரைக் கிருமி தொற்­றவே, அங்கு மொத்த பாதிப்பு 216ஆகக் கூடி­யது.

அவ்­வி­டு­தி­க­ளுக்­குள்­ளேயே கொரோனா பர­வி­யது என்­றும் அங்­கி­ருந்து கிருமி வெளி­யில் பர­வி­ய­தற்­கான சான்று இல்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இப்­போது கொவிட்-19 நோயா­ளி­கள் 1,325 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அவர்­களில் 209 பேர்க்­குச் செயற்கை உயிர்­வாயு தேவைப்­படு­கிறது; 30 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ள­னர்.

உடல்­நிலை மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ரில் 201 பேர் 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள்.

புதிதாக 2,236 பேர் பாதிப்பு