தடைபட்ட 'பிடிஓ' வீடுகளின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்

தடைபட்ட 'பிடிஓ' வீடுகளின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்

1 mins read
aef21166-66d1-43cb-b5e2-3db69d4d5a74
வெஸ்ட்கோஸ்ட் பார்க்வியூவில் உள்ள தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீவக அடுக்குமாடி வீடுகள். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்­கிட் பாத்­தோக், கிள­மெண்டி, புக்­கிட் பாஞ்­சாங், உட்­லண்ட்ஸ் ஆகிய வட்­டா­ரங்­களில் தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் (பிடிஓ) ஐந்து வீட­மைப்­புத் திட்­டங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­களை நான்கு ஒப்­பந்­த­தா­ரர்­கள் ஏற்­றுக்­கொண்டுள்­ள­னர். அந்­தக் கட்­டு­மா­னத் திட்­டங்­களின் முக்­கிய ஒப்­பந்­த­தா­ரர் 'கிரேட்­எர்த் கட்­டு­மான நிறு­வ­னம்' நொடித்­துப்­போ­னதே இதற்­குக் கார­ணம்.

இத்­திட்­டங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வடைய மேலும் இரண்­டி­லி­ருந்து மூன்று மாதங்­கள் தாம­த­மாகலாம். ஏறத்­தாழ 3,000 வாடிக்­கை­யா­ளர்­கள் 2022ன் முதல் காலாண்­டி­லி­ருந்து 2023ன் மூன்றாம் காலாண்­டுக்­குள் வீட்­டுச் சாவி­க­ளைப் பெற்­றுக்­கொள்ள எதிர்­பார்க்­கலாம். 'டீம்­பில்ட் எஞ்­சி­னி­ய­ரிங் ஆண்ட் கன்ஸ்­ட்ரக்­‌ஷன்', 'நியு­கொன் பில்­டர்ஸ்', 'வெல்­டேக் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்', 'சிஇ­எஸ் எஞ்­சினி­ய­ரிங் கன்ஸ்­ட்ரக்­‌ஷன்' ஆகிய நான்கு ஒப்­பந்­த­தா­ரர்­கள் செப்­டம்­பர் 28ஆம் தேதி செவ்­வாய் அன்று பணி­ய­மர்த்­தப்­ப­ட்ட­னர். ஐந்து தளங்­க­ளி­லும் பணி­கள் அடுத்த மாதத் தொடக்­கத்­தில் தொட­ரும்.

ஆக­ஸ்ட் 20ஆம் தேதி­யி­லி­ருந்து அத்­த­ளங்­களில் பணி­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அர­சாங்­கத்­தின் உதவி கிட்­டி­ய­போ­தும், அந்த ஐந்து வீட­மைப்­புத் திட்­டங்­க­ளைத் கிரேட்­எர்த் நிறு­வ­னத்­தால் முடிக்க இய­லவில்லை.

மேலும் இரண்டு பொதுத்­திட்­டங்­களும் தாம­த­ம­டை­யக்­கூ­டும். பல துணை ஒப்­பந்­தக்­கா­ரர்­களும் கிரேட்­எர்த் நிறு­வ­னத்­தால் செலுத்த முடி­யாத கட்­ட­ணங்­க­ளால் கணி­ச­மான இழப்­பு­க­ளைச் சந்­திக்­கக்­கூ­டும். வீடு வாங்­கு­வோ­ருக்கு ஏற்­படும் பாதிப்­பு­க­ளைக் குறைக்க, கடந்த ஒரு மாத கால­மாக கிரேட்­எர்த் நிறு­வ­னத்­து­ட­னும் 'பிரைஸ்­வாட்­டர்­ஹ­வுஸ் கூப்­பர்ஸ்' உட­னும் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் தெரி­வித்­தது.