இந்தோனீசியா, புருணை, தாய்லாந்துக்கு தடுப்பூசிகள்

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் 122,400 'அஸ்ட்­ரா­ஸெ­னகா' கொவிட்-19 தடுப்­பூசி மருந்­து­களை இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம், ரியாவ் தீவு­க­ளுக்கு செப்­டம்­பர் 28 செவ்­வாய் அன்று வழங்­கி­யது.

சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தோ­னீ­சிய தூதர் திரு சுர்யோ பிராட்­டொ­மோ­வி­டம், ஜூரோங் துறைமு­கத்­தில் அந்­த மருந்து­களை வெளி­யு­றவு     ஒ ஒப்­ப­டைத்­தார்.

தடுப்­பூசி மருந்­து­கள் நேற்று பாத்­தா­மி­லுள்ள பத்து அம்­பார் துறை­மு­கத்தை அடைந்­தது.

"கொள்ளை நோய்க்கு எதி­ரான போராட்­டம் நடக்­கும் காலத்­தில், இந்­தோ­னீ­சிய அர­சாங்­கத்­துக்­கும் சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­துக்­கும் இடையே நிலவி வரும் நீண்­ட­கால நல்­லு­ற­வின் அடை­யா­ள­மாக இந்தத் தடுப்பு மருந்­து­ வழங்­கல் திகழ்­கிறது," என அமைச்­சர் தமது உரை­யில் கூறி­னார்.

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அண்மையில் 500 டன் உயிர்­வாயு­வை­யும் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு அனுப்பி வைத்­தது. அதற்கு முன், சிங்­கப்­பூர் சமூக பரா­ம­ரிப்­புக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­கள் இங்கு வந்­த­டைய இந்­தோ­னீ­சியா வழி­வகுத்­தது.

வழங்­கப்­பட்ட 'அஸ்ட்­ரா­ஸெ­னெகா' தடுப்பு மருந்­து­கள், 'கோவெக்ஸ்' திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், மற்ற நாடு­க­ளுக்கு கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் ஆத­ர­வ­ளிக்க கொள்­முதல் செய்­யப்­பட்­டன.

அனைத்­து­ல­கத் திட்­ட­மான 'கோவேக்ஸ்'சின் நோக்­கம் வச­தி­யில்லா நாடு­க­ளுக்­கும் தடுப்­பூசி மருந்­து­கள் கிடைப்­பதே ஆகும்.

மேலும் சிங்­கப்­பூர் புருணை நாட்­டுக்கு 100,000 மொடர்னா தடுப்­பூசி மருந்­து­களை அனுப்­பி­யுள்­ளது. புருணை இதே­ய­ளவு தடுப்­பூசி மருந்­து­களை சிங்­கப்­பூருக்குப் பின்­னர் திருப்­பி­ய­ளிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் இந்த ஏற்பாடு, இரு நாட்டிலும் தடுப்பூசி போடும் கால அட்டவணை சீராக இயங்க துணை புரியும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

திங்­கள்­கி­ழமை அன்று 122,400 கொவிட்-19 தடுப்பு ஊசி மருந்­து­களை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் தாய்­லாந்­துக்கு வழங்­கி­யது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!