ஆய்வு: டாக்சி, வாடகை கார்களை நாடுவோர் அதிகரிப்பு; சேவையின் தரம் குறித்து பயணிகள் அதிருப்தி

நோய்த்­தொற்­றுச் சூழ­லுக்கு இடையே டாக்சி, தனி­யார் வாட­கைக் கார்­களில் பய­ணம் செய்­வோரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

ஆறு பய­ணி­களில் ஒரு­வர் இது­போன்ற தனி­யார் கார்­க­ளையே நாடு­கின்­ற­னர் என்று ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆயி­னும் இச்­சே­வை­க­ளைக் குறித்த வாடிக்­கை­யா­ளர் மன­நி­றைவு சற்று குறைந்­துள்­ளது என ‘இன்ஸ்­டி­டி­யூட் ஆஃப் எக்­ச­லன்ஸ்’ (ஐஎஸ்இ) நடத்­திய கருத்­தாய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழத்­தின் ‘ஐஎஸ்இ’, 2,350 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டையே ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து ஜூன் மாதம் வரை இணை­யம் வழி இக்­க­ருத்­தாய்வை மேற்­கொண்­டது.

61.1 விழுக்­காட்­டி­னர் கொள்­ளை­நோ­யால் தாங்­கள் பய­ணம் மேற்­கொள்­ளும் விதத்­தில் மாற்­றம் ஏற்பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர் என பல்­க­லைக்­க­ழ­கம் குறிப்­பிட்­டது.

கிட்­டத்­தட்ட நான்­கில் ஒரு­வர் எம்­ஆர்­டி­களில் பய­ணம் செய்­வ­தைக் குறைத்­துக்­கொண்­டுள்­ள­னர். 18.3 விழுக்­காட்­டி­னர் பொதுப்­பேருந்­தில் பய­ணம் செல்­வ­தைக் குறைத்­துக்­கொண்­டுள்­ள­னர்.

15.7 விழுக்­காட்­டி­னர் டாக்­சி­க­ளி­லும் தனி­யார் வாட­கைக் கார்­க­ளி­லும் பய­ணம் செய்­வ­தா­கக் கூறி­உள்­ள­னர்.

டாக்­சி­க­ளி­லும் தனி­யார் கார்­களி­லும் பய­ணம் செல்­வது நோய்த்­தொற்று அபா­யத்­தைக் குறைக்­கும் என பலர் எண்­ணு­வது இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று ‘ஐஎஸ்இ’யின் நிர்­வாக இயக்­கு­ந­ரான நீத்தா லட்­சு­ம­ன­ண­தாஸ் கூறி­யிள்­ளார்.

பய­ணி­கள் வாட­கைக்­கார்­களை நாடும் போக்கு அதி­க­ரித்­தி­ருந்­தா­லும், பயண முறை குறித்த வாடிக்­கை­யா­ளர் மன­நி­றைவு 3.6% குறைந்­துள்­ளது ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

தேவைப்­ப­டும்­போது சேவை­க­ளைப் பெற­மு­டி­யா­தது, விதிக்­கப்­படும் கட்­ட­ணங்­கள், கட்­ட­ணத் தள்­ளு­படி, கழிவு இன்மை ஆகி­யவை சேவை குறித்த அதி­ருப்­திக்கு மூன்று முக்­கி­யக் கார­ணங்­களா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் சுட்­டி­யது.

மேலும் எம்­ஆர்டி, பொதுப்­பேருந்து பய­ணி­கள் மன­நி­றைவு விகி­தம் சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் அதே அள­வில் இருப்­ப­தையே ஆய்வு முடி­வு­கள் காட்­டு­கின்­றன.

“நோய்த்­தொற்­றுக்கு முந்­தைய காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் சுமார் 60 விழுக்­காட்­டி­னரே தொடர்ந்து பொதுப்­போக்­கு­வ­ரத்­துச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தாக செப்­டம்­பர் 20ஆம் தேதி போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!