‘நோய்ப்பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் பார்வையற்றோருக்கு உதவ வழிவகை காணப்பட வேண்டும்’

கொவிட்-19 கட்­டு­ப்பா­டு­க­ளைப் பின்­பற்­று­வது திரு டென்­னிஸ் தியோ போன்ற பார்வை குன்­றி­ய­வர்­க­ளுக்­குப் பெரும் போராட்­ட­மாகவே உள்­ளது.

60 வய­தா­கிய திரு தியோ, தமது மனை­வி­யு­ட­னும் இரு மகன்­க­ளு­ட­னும் கேலாங்­கில் வசித்து வரு­கி­றார். அவர் வாரத்­துக்கு இரு முறை­யா­வது அவ­ரது வீட்­டிற்கு அரு­கி­லுள்ள உணவு நிலை­யத்­துக்கு மதிய உணவு சாப்­பி­டச் செல்­வார்.

ஓய்­வு­பெற்ற தக­வல் தொழில்­நுட்ப மேலா­ள­ரான திரு தியோ, தம்­மால் பாது­காப்பு தூர இடை­வெளி கருதி குறி­யி­டப்­பட்­டுள்ள இருக்­கை­கள் எவை என்று அறிந்து­கொள்ள முடி­ய­வில்லை என்று கூறினார்.

"என் கையால் தட­விப்­பார்த்­தால்­தான் நாற்­கா­லி­யைச் சுற்றி வலையோ தடுப்பு நாடாவோ போட்­டி­ருப்­பதை என்­னால் உணர முடி­யும். ஆனால், வேறு­வி­த­மான குறி­யீ­டு­கள் இடப்­பட்­டி­ருந்­தால் அதை அறிந்­து­கொள்­வது மிக­வும் கடி­னம்," என்­றார் திரு தியோ.

மேலும் சில வேளை­களில் தாம் சிர­மப்­ப­டு­வ­தைக் கண்டு நல்ல உள்­ளங்­கள் சில ஓடி வந்து உதவி செய்­தா­லும், சிலர் தவ­றான இருக்­கை­யில் அமரும்போது தம்­மைக் கடிந்­து­கொள்­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

திரு தியோ, தமது 53 வயது வய­தில் நச்­சு­ணவு உட்­கொண்­ட­தன் விளை­வாக ஏற்­பட்ட மோச­மான உடல்­ந­லக் கோளாறு கார­ண­மா­கப் பார்­வை­யி­ழக்க நேரிட்­டது.

திரு தியோ­வுக்கு வலது கண்­ணில் பார்­வை­யில்லை. இடது கண்­ணால் வடி­வங்­கள், நிழல்­கள் மட்டும்­தான் பார்க்க முடி­யும்.

தமது கழியை­யும் பேச்­சு­வழி இயங்­கும் கைபேசிச் செய­லி­க­ளை­யும் பயன்­படுத்தி அவ­ரால் சுய­மாக பய­ணிக்க முடி­யும்.

ஆனால் நோய்த்­தொற்­றுத் தொடங்­கி­ய பின், பாது­காப்பு விரை­வுத் தக­வல் குறி­யீ­டு­களை (கியூ­ஆர் கோட்) பயன்­படுத்தி வரு­கை­யைப் பதிவு செய்­வது மிக­வும் சிர­ம­மாக இருப்­ப­தாக அவர் தெரிவித்தார்.

சிங்­கப்­பூர் பார்­வை­யற்­ற­வர்­கள் சங்­கம், பார்­வைக் குன்­றி­ய­வர் படும் சிர­மங்­களை அது அறி­யும் என்று கூறி­யுள்­ளது.

மேலும், அர­சாங்­கம் இய­லா­த­வர்­கள் குறித்து நெகிழ்­வுத்­தன்மையு­டைய வழி­மு­றை­களை பாது­காப்பு இடை­வெளி தூதர்­களுக்கு வெளியிட்­டுள்­ள­தா­க­வும் சங்கம் கூறி­யது.

பாது­காப்பு இடை­வெ­ளிக் கட்டுப்­பா­டு­க­ளால் நெருங்­கி­வந்து தங்­கள் கைக­ளைப் பார்­வை­யற்­ற­வர்­கள் பற்­றிக்­கொள்ள அனு­ம­தித்து உதவ மக்­கள் தயங்­கு­கின்­ற­னர்.

மாறாக, பேச்­சு­வழி வழி­காட்ட முற்­ப­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், 'கியூ­ஆர் கோடு'களை எல்லா கடை­க­ளி­லும் வலது பக்­கத்­தில் வைப்­பது போன்ற சீராக்க நட­வ­டிக்­கை­களை மேற்கொள்­வ­து பற்றி அர­சாங்­கம் ஆராயலாம் என்று உடற்­கு­றையுள்­ளோர் சங்­கத்­தின் நிர்­வாக இயக்குநர் டாக்­டர் மரிசா மெட்­ஜ­ரல்-மில்ஸ் கூறி­யுள்­ளார்.

இது­போன்ற சிர­மங்­க­ளுக்கு ஆளா­வோ­ருக்கு உத­வும் வகை­யில் பேரங்­காடி ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­க­லாம் என்­றும் டாக்டர் மரிசா பரிந்­து­ரைத்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!