விரைவில் உயர்தரம் கொண்ட, நீடித்து நிலைக்கக்கூடிய மீன் வளர்ப்புத் திட்டம் சிங்கப்பூரில்

சிங்­கப்­பூ­ரில் நீடித்து நிலைக்­கக்­கூடிய மீன் வளர்ப்­புத் திட்­டம், மேலும் ஒரு நிலையை எட்­டிப் பிடிக்­க­வுள்­ளது. உள்­ளூர் மீன் பண்ணை நிறு­வ­ன­மான 'பார­முண்டி குரூப்', சிங்­கப்­பூர் இயற்­கைக்­கான உல­க­ளா­விய நிதி அமைப்­பு­டன் செய்து கொண்­டுள்ள மைல்­கல் பங்­கா­ளித்­துவ ஒப்­பந்­தப்­படி, சிங்­கப்­பூ­ரில் பொறுப்­பு­ணர்­வு­மிக்க கட­லு­ணவு உற்­பத்­தியை அதி­க­ரிக்க இய­லும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மீன் வளர்ப்பு மேம்­பாட்­டுப் பணித் திட்­டத்தை நடை­மு­றைப்­படுத்­து­வது தொடர்­பில் அமைப்பு தகுந்த வழி­காட்­டு­தல்­களை வழங்­கும். மீன் வளர்ப்­புப் பொறுப்­பா­ளர் மன்ற (ஏஎஸ்சி) சான்­ற­ளிப்பு நிலையை 'பார­முண்டி குரூப்' அடை­வ­தற்­கான முக்­கிய இலக்­கு­களை அமைப்பு வகுக்­கும் என்று இரு பங்­கா­ளித் தரப்­பு­களும் நேற்று தெரி­வித்­தன. சுற்­றுச்­சூ­ழல், சமூ­கம் என்ற இரு நிலை­க­ளி­லும் கட­லு­ணவை வளர்ப்­ப­தில் பொறுப்­பு­ணர்வு காட்­டும் பண்­ணை­கள், மதிப்­பி­டப்­பட்ட பின்­னர் இந்த 'ஏஎஸ்சி' சான்­றி­தழ் வழங்­கப்­படும்.

புதி­தாக ஒப்­பந்­த­மா­கி­யுள்ள திட்­டம், லஸா­ரஸ் மற்­றும் செயிண்ட் ஜான்ஸ் தீவு­க­ளுக்கு இடைப்­பட்ட பகு­தி­யின் புதிய தளத்­தி­லும் சிங்­கப்­பூ­ரின் தென் நீர­ணை­யில் உள்ள 'பார­முண்டி குரூப்' நிறு­வ­னத்­தின் ஆழ்­க­டல் மீன் பண்­ணை­யி­லும் அமைந்­தி­டும்.

'பார­முண்டி' மீன்­வ­கை­யின் எதிர்­கா­லத்­துக்­காக நீடித்து நிலைக்­கக்­கூ­டிய மீன் வளர்ப்பை நடை­மு­றைப்­படுத்­தும் முன்­னோ­டித் திட்­டத்தை முன்­னெ­டுத்து நடத்­தி­யது 'பார­முண்டி குரூப்' நிறு­வ­னமே.

தலை­சி­றந்த மீன் வளர்ப்­புச் செயல்­மு­றை­கள் கொண்­ட­தற்­காக ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 2016ஆம் ஆண்டி­லும் சிங்­கப்­பூ­ரில் 2018ஆம் ஆண்­டி­லும் நான்கு நட்­சத்­திர விருது பெற்ற முதல் நிறு­வ­ன­மும் அது என்று கூறப்­பட்­டது.

வர்த்­தக ரீதி­யி­லான மீன் வளர்ப்­புத் திட்­டத்தை சிங்­கப்­பூ­ரின் தென் நீரி­ணை­களில் விரி­வு­ப­டுத்­தும் சாத்­தி­யத்தை அர­சாங்­கம் ஆராய்ந்­திட புதிய ஆய்­வுக்­கு­ழுவை நிய­மித்­துள்ள நிலை­யில், 'பார­முண்டி குரூப்' நிறு­வ­னத்­தின் இப்­பு­திய திட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டில் இது­வரை நிறு­வனம் ஆஸ்­தி­ரே­லியா, சிங்­கப்­பூர், புருணை நாடு­களில் கிட்­டத்­தட்ட 2,200 டன் மீன்­களை உற்­பத்தி செய்­துள்­ளது. உரி­மம் பெற்ற சிங்­கப்­பூ­ரின் 110 கடல்­சார் மீன் பண்­ணைத் தளங்­களில் 108 கட­லோர மீன் பண்­ணை­கள் ஜோகூர் நீரி­ணை­யில் அமைந்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!