உணவுக் கழிவுக்குப் புதுப்பொலிவு தரும் நிறுவனங்களுக்கு விருது

1 mins read
49e32eea-83bf-4c29-8c63-714adf0eaa75
700 குவளைகள் நிறைய பயன்படுத்தப்பட்ட காப்பித் தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மேசை. படம்: A1 Environment -

உண­வ­கங்­கள், ஹோட்­டல்­கள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து பயன்­ப­டுத்­தப்­பட்ட காப்­பித் தூளைச் சேக­ரித்து, அவற்றை வீட்­டுப் பொருட்­க­ளைத் தயா­ரிப்­ப­தற்­கான மரத்­துண்­டு­களாக்­கும் நிறு­வ­னம் 'ஏ1 என்­வை­ர­மண்ட்'. இவ்­வாறு உண­வுக் கழி­வுக்­குப் புதுப்­பொ­லிவு தரும் 11 நிறு­வ­னங்­க­ளுக்கு நேற்று புதி­தாகத் தொடங்­கப்­பட்­டுள்ள 'உணவு வள மதிப்­பீட்டு விருது' வழங்­கப்­பட்­டது.

'உணவு வள மதிப்­பீடு' என்­பது உண­வுக் கழிவை மதிப்­பு­டைய பொருட்­க­ளாக மாற்­று­வ­தா­கும். உண­வுக் கழிவை உரம் அல்­லது திர­வச் சத்­து­க­ளாக மாற்­று­வ­தற்­குப் பதி­லாக இத்­த­கைய முறை பல­ரா­லும் விரும்­பப்­ப­டு­கிறது. விரு­து­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் வழங்­கி­யுள்­ளது. 'ஏ1 என்­வை­ர­மண்ட்' அதன் செயல்­மு­றை­களை விரி­வு­ப­டுத்­திய பிறகு, அடுத்த ஆண்டு இறு­திக்­குள் பல­வகை வீட்­டுப் பொருட்­களை மர­வேலை ஊழி­யர்­கள் கூட்­ட­ணி­யில் உரு­வாக்கி விற்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக நிறு­வன இயக்­கு­நர் லோ யென் லிங் தெரி­வித்­தார்.

நீர்ப்­புகா, நீடித்­தத்­தன்­மை­யுடைய துண்­டு­கள் உரு­வாக்­கம், உள்­ளூர் பண்­ணை­க­ளுக்கு உரம் ஆகி­ய­வற்­றுக்கு இது­வரை 650 டன் காப்­பித் தூளை நிறு­வ­னம் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன் வழி அதி­க­மான மரங்­கள் வெட்­டப்­ப­டு­வ­தை­யும் தவிர்க்க முடி­யும் என்­றார் திரு­வாட்டி லோ.

'பார்லி' எனப்­படும் வாற் கோதுமை தானி­யங்­களை மாச்­சத்து இல்­லாத, நார்ச்­சத்து அதி­க­முள்ள நூடல் உண­வாக மாற்­றும் 'கொஸ்­மோட்­ஹெல்த்' நிறு­வ­னத்­திற்­கும் விருது வழங்­கப்­பட்­டது.

இந்த நூடல் வகையை உட்­கொள்­ளும்­போது ரத்­தத்­தில் சர்க்கரை அளவு அதி­க­ரிப்­ப­தில்லை.

கடந்த ஆண்­டில் மொத்த கழி­வுப்­பொ­ருட்­களில் உண­வுக் கழிவு 11%. வீசப்­பட்ட 665 மில்­லி­யன் கிலோ உண­வுக் கழி­வில் 19% மட்­டுமே மறு­ப­ய­னீடு செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.