உள்துறை அமைச்சை ஏமாற்றிய தம்பதி

மூன்று ஆண்­டு­க­ளாக போலி விலைப்­புள்­ளி­க­ளைச் சமர்ப்­பித்த தன் மூலம் உள்­துறை அமைச்­சின்­கீழ் பல்­வேறு துறை­களை ஒரு தம்­ப­தி­யர் ஏமாற்றி வந்­த­னர்.

சியூ பூன் பெங், 43, என்­ப­வ­ரும் குவான் பூய் யீ, 37, எனும் அவ­ரது மனை­வி­யும் 'பில்ட்­ஃபோர்ம்ஸ் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்' நிறு­வ­னத்­தின் பொது மேலா­ள­ரா­க­வும் இயக்­கு­ந­ரா­க­வும் சதித்­திட்­டம் தீட்­டி­னர். கடந்த 2012 முதல் 2014 வரை உள்­துறை அமைச்­சின் பல்­வேறு துறை­க­ளி­ட­மி­ருந்து $165,000 மதிப்­புள்ள வேலை ஒப்­பந்­தங்­களை அத்­தம்­ப­தி­யர் பெற்­ற­னர். சதித்­திட்­டம் தீட்­டி­ய­தாக இரு­வர்­மீ­தான குற்­ற­மும் நேற்று நிரூ­ப­ண­மா­னது. சதித்­திட்­டம் தீட்­டி­யதை இரு­வ­ரும் ஒப்­புக்­கொண்­ட­னர். சியூ­மீது 10 மோச­டிக் குற்­றச்­சாட்­டு­களும் குவான் மீது மூன்று குற்­றச்­சாட்­டு­களும் நிரூ­பிக்­கப்­பட்­டன.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்­ப­ரில், உள்­துறை அமைச்­சின் மேற்கு மண்­ட­லத்­தில் அதன் அனைத்து கட்­ட­டப் பணி­க­ளுக்­கும் ஒரே துணை ஒப்­பந்­த­தா­ர­ராக சியூ­வின் நிறு­வ­னம் இருந்­தது.

மேற்கு மண்­ட­லத்­தில் உள்ள அமைச்­சின் துறை­களில் சிங்­கப்­பூர் போலிஸ் படை, உள்­து­றைக் குழுப் பயிற்­சிக் கழ­கம், குடி­நு­ழை­வுச் சோத­னைச்­சா­வடி ஆணை­யம், சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை உள்­ளிட்­டவை அடங்­கின.

இந்த ஏற்­பாட்­டின் ஒரு பகு­தி­யாக, குறிப்­பிட்ட சில பணி­க­ளுக்­காக மூன்று விலைப்­புள்­ளி­களை நிறு­வ­னம் தேட வேண்­டும்.

உள்­துறை அமைச்­சின் தகு­திக்­கூ­று­க­ளைப் பூர்த்­தி­செய்­யும் ஆகக் குறைந்த விலை­யி­லான விலைப்­புள்­ளிக்கு குத்­தகை வழங்­கப்­படும்.

'பில்ட்­ஃபோர்ம்ஸ் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்' மூலம் மற்ற துணை ஒப்­பந்த தா­ரர்­க­ளி­ட­மி­ருந்து உண்­மை­யான விலைப்­புள்­ளி­க­ளைப் பெற சியூ­வும் குவா­னும் முற்­பட்­ட­னர். ஆனால், ஒப்­பந்­ததா­ரர்­கள் அவர்களின் கோரிக்­கை­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­க­வில்லை. 2012 ஜன­வ­ரி­யில், பில்ட்­ஃபோர்ம்ஸ் நிறு­வ­னத்­து­டன் சேர்த்து மற்ற நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்­தும் போலி விலைப்­புள்ளி களைத் தயார்­செய்­வ­தற்­கான யோச­னையை சியூ முன்­வைத்­தார்.

'பில்ட்­ஃபோர்ம்ஸ்' நிறு­வ­னத்­தின் விலைப்­புள்­ளியே ஆகக் குறைந்த விலை­யில் அமைய வேண்­டும் என்­பதே அவ­ரது திட்­டம். அப்­போ­து­தான், வேலை ஒப்­பந்­தங்­கள் அவ­ரது நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­படும்.

மற்ற நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து போலி விலைப்­புள்­ளி­களை எப்­ப­டித் தயா­ரிப்­பது என்­பது பற்றி மனைவி குவா­னுக்கு சியூ சொல்­லித் தந்­தார். அதன்­படி, 'பில்ட்­ஃபோர்ம்ஸ்' நிறு­வ­னத்­தின் நிர்­வா­கப் பணி­யா­ளர்­களில் சில­ருக்கு அதை குவான் சொல்­லித் தந்­தார். மூன்று வெவ்­வேறு நிறு­வ­னங்­க­ளின் பெய­ரில் போலி விலைப்­புள்­ளி­கள் தயா­ரிக்­கப்­பட்­டன. போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரிக்க, 'பில்ட்­ஃபோர்ம்ஸ்' நிறு­வ­னத்­தின் நிர்­வா­கப் பணி­யா­ளர்­கள் அந்த மூன்று நிறு­வ­னங்­க­ளின் பெயர்­க­ளைத் தயார் செய்­த­னர்.

சியூ, குவா­னின் சதித்­திட்­டம் எப்­படி வெளிச்­சத்­திற்கு வந்­தது என்­பது பற்றி நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளது வழக்கு அக்­டோ­பர் 29ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!