இங்கு விற்கப்படும் 'எர்த்தன் பாட்' மிளகாய் தூளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் ஒரு தொகுதி விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது. சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்று இதைத் தெரிவித்தது.
நிம்ஸ் எனும் உள்ளூர் நிறுவனம் 'எர்த்தன் பாட்' வகை மிளகாய் தூளை உற்பத்தி செய்கிறது. அந்த வகை மிளகாய் தூளில் 'எஃப்லடாக்சின்ஸ்' (aflatoxins) எனும் நச்சுவகை அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்ததை அமைப்பு கண்டறிந்தது. அதனால் மாசுபட்ட தொகுதியை மீட்டுக்கொள்ளும்படி நிறுவனத்துக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது.
பிறப்பு குறைபாடுகளையும் உண்டாக்கும் 'எஃப்லடாக்சின்ஸ்' நச்சுவகையை மிகக் குறைந்த அளவில் மட்டுமே உண்ண முடியும் என்றது அமைப்பு.
பாதிக்கப்பட்ட பொருளை வாங்கியோர் அதனை உண்ண வேண்டாம் என்று அமைப்பு அறிவுறுத்தியது.


