‘ஆன்டிபாடி காக்டெய்ல்’ தடுப்பூசி மருந்து இம்மாதம் வந்து சேரும்

கடுமையாக நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் இரு மருந்துகளுடைய கலவை தடுப்பூசி

கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வ­ரும் வேளை­யில், அதை எதிர்த்­துப் போராட கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு இன்­னும் அதி­க­மான சிகிச்­சை­களும் கிடைக்­கத் தொடங்­கி­யுள்­ளன.

இதில் ஆகக் கடை­சி­யா­கக் குறிப்­பி­டப்­ப­டு­வது இரு மருந்­து­களின் கல­வை­யான கொவிட்-19 'ஆன்­டி­பாடி காக்­டெய்ல்' தடுப்­பூசி. இந்த மருந்தை ரீஜெ­ன­ரோன் அண்ட் ரோச் (Regeneron and Roch) நிறு­வ­னங்­கள் கூட்­டா­கத் தயா­ரித்­துள்­ளன.

இந்­தத் தடுப்­பூசி மருந்து இம்­மா­தம் சிங்­கப்­பூ­ருக்கு வந்து சேரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் கேள்விக்குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் தொற்­று­நோய்­க­ளுக்­கான தடுப்பு நிலை­யம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.

இந்­தக் கலவை தடுப்­பூசி, நோயால் மித­மாகப் பாதிக்­கப்­பட்டு, அதே­வே­ளை­யில் கடு­மை­யான பாதிப்­புக்­குள்­ளா­கும் நோயா­ளி­களுக்­குச் சிகிச்­சை­ய­ளிக்க பயன்­ப­டுத்­தப்­படும்.

இந்த மருந்து, பெருந்­தொற்று சிறப்பு அனு­ம­திப் பாதை மூலம் சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்த சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் இடைக்­கால அங்­கீ­கா­ரத்­தைக் கடந்த மாதம் 21ஆம் தேதி வழங்­கி­யது.

உயிர்­வாயு சிகிச்சை தேவைப்­படாத, கடு­மை­யான கொவிட்-19 பாதிப்­ப­டை­யக்­கூ­டிய 18 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்­டோ­ரி­டம் இந்த மருந்­தைக் கொண்டு, சிகிச்சை மேற்­கொள்ள தொற்­று­நோய் நிபு­ணர்­க­ளால் முடி­யும்.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் மேற்­கொண்ட மூன்று கட்ட ஆய்­வின்­படி, இந்த 'ஆன்­டி­பாடி காக்­டெய்ல்' தடுப்­பூசி மருந்து, மருத்­து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்­சைக்கு இட்­டுச் செல்­லும் அபா­யக் கட்­டத்­தை­யும் அல்­லது மர­ணத்­தை­யும் 70% குறைக்­கும் ஆற்­றல் பெற்­றது என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

நோய்க்­கான அறி­கு­றி­யும் முன்­பை­விட நான்கு நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே தெரிந்­து­வி­டும்.

கடந்த மாதம் 24ஆம் தேதி, உல­க சுகா­தார நிறு­வ­னக் குழு ஒன்று, இந்­தக் கலவை மருந்­தைக் கொண்டு, ஆன்­டி­பா­டி­கள் அறவே இல்­லாத நோயா­ளி­கள் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­படும் நிலை­யைத் தவிர்க்­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­தது.

இந்த 'ஆன்­டி­பாடி காக்­டெய்ல்' தடுப்­பூசி சிகிச்­சைக்கு, அவ­ச­ர­நிலைக்­குப் பயன்­ப­டுத்­த­லாம் என்று அமெ­ரிக்க அவ­ச­ர­நி­லைத் துறை கடந்த ஆண்டு நவம்­ப­ரில் அனு­மதி அளித்­தது.

கடந்த ஆண்டு முன்­னைய அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­போது இந்த மருந்­தைக் கொண்ட சிகிச்சை அவ­ருக்கு அளிக்­கப்­பட்­டது. அப்­போ­தி­லி­ருந்து இந்த மருந்­தைப் பற்றி பல­ருக்­கும் தெரிய வந்­தது.

இந்­த சிகிச்­சைக்கு பிரிட்­டன் கடந்த மாதம் அனு­மதி வழங்­கி­யது. தற்­போது ஐரோப்பா இந்­தத் தடுப்­பூசி சிகிச்­சை­யைப் பயன்­படுத்­து­வது குறித்து ஆராய்ந்து வரு­கிறது.

இந்த 'ஆன்­டி­பாடி காக்­டெய்ல்' தடுப்­பூசி மருந்தைத் தவிர மேலும் நான்கு வகை மருந்­து­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!