தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

1 mins read
f87c0594-4dc9-4a46-9ccf-8ee9b64288a3
நேற்று பிற்பகல் 1 மணிக்கு சுமார் 35 ஊழியர்கள் நிலையத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூன்று நாள் தீவிர சுத்­தப்­ப­டுத்­து­தல் மற்­றும் கிருமி நீக்­கப் ­ப­ணி­கள் முடிந்­த­தும் பாசிர் பாஞ்­சாங் மொத்த விற்­பனை நிலை­யம் நேற்று பிற்­பகல் மீண்­டும் திறக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யத்­துக்­குச் செல்­லும் அனைத்து வாட­கை­தா­ரர்­களும் ஊழி­யர்­களும் அவ­ர­வர் பணி­யாற்­றும் பகு­தி­யைப் பொறுத்து வண்­ணக் கைப்­பட்­டை­களை அணிந்­தி­ருக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

பழங்­கள், காய்­க­றி­கள், உயர்ந்த பொருட்­கள் போன்­றவை அந்­தப் பகு­தி­கள். குளிர் அறை மற்­றொரு பகுதி. வாட­கை­தா­ரர்­களும் ஊழி­யர்­களும் தேவையில்லாமல் தங்­கள் பகு­தியை விட்டு மற்­றொரு பகு­திக்­குச் செல்­லக்­கூடாது.

பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் காலக்­கெடு 14 நாட்­க­ளுக்கு ஒரு முறை­யி­லி­ருந்து ஏழு நாட்­ க­ளுக்கு ஒரு முறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தி­ட­மி­ருந்து 'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடிவு கிடைக்­கப் பெறா­த­வர்­களுக்கு நேற்று நிலை­யத்­துக்­குள் நுழைய அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி, இந்த நிலை­யத்­து­டன் தொடர்­பு­டைய 127 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். மூன்று நான்கு லாரிகள் 5-10 நிமிடங்களுக்கு ஒரு முறை உள்ளே சென்றன.