'ராயல் கரீபியன்' சொகுசு கப்பல் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

'ராயல் கரீபியன்' சொகுசு கப்பல் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

1 mins read
58bb13b9-9186-4989-acb1-cb54d0293253
-

'ராயல் கரீ­பி­யன்' சொகு­சுக் கப்­ப­லில் (படம்) பய­ணம் செய்ய விரும்­பும் 12 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்­டோர், தாங்­கள் பய­ணம் மேற்­கொள்­ளும்­போது முழு­மை­யா­கத் தடுப்­பசி போட்­டி­ருக்க வேண்­டும்.

இந்த விதி­முறை இன்று முதல் நடப்­புக்கு வரு­கிறது என்று தனது இணை­யத்தளத்­தில் குறிப்­பிட்­டி­ருந்த 'ராயல் கரீ­பி­யன்' இன்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னம், அக்­டோ­ப­ருக்கு முன் பய­ணம் செய்ய முன்­ப­திவு செய்­தி­ருந்­தோர், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றா­லும் பய­ணம் செய்­ய­லாம் என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இரு சொகு­சுக் கப்­பல் நிறு­வ­னங்­க­ளான 'ராயல் கரீ­பி­யன்' இன்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­ன­மும் 'ட்ரீம் குரு­சஸ்' நிறு­வ­ன­மும் தற்­போது சொகு­சுக் கப்­பல் பய­ணங்­களை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வழங்கி வரு­கின்­றன.

அதில் 'ட்ரீம் குரு­சஸ்' நிறு­வ­னத்­தின் சொகு­சுக் கப்­பல் பய­ணங்­களை மேற்­கொள்­வோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்று அதன் இணை­யத்தளத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

சொகு­சுக் கப்­பல்­களில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தால், தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கப்­பல் பய­ணங்­கள் கடந்த ஆண்டு நவம்­ப­ரில் இந்த இரு கப்­பல் நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டும் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

ஆனால் அந்­தப் பய­ணங்­கள் எந்த இடத்­தி­லும் நிற்­காது. பய­ணத்­துக்கு முன் பய­ணி­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.