மின்சார, எரிவாயுக் கட்டணம் கூடியது

மின்­சா­ரக் கட்­ட­ணமும் எரிவாயு கட்டணமும், இன்று முதல் வரும் டிசம்­பர் 31 வரை உயரவிருக்கிறது.

இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து மின்­சா­ரக் கட்­ட­ணம் தொடர்ந்து உயர்ந்து வரு­கிறது.

ஜூலை முதல் செப்­டம்­பர் வரை­யி­லான காலாண்­டு­டன் ஒப்­பு­நோக்க, அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லான காலாண்­டில் மின்­சா­ரக் கட்­ட­ணம் சரா­ச­ரி­யாக 3.2% விழுக்­காடு உயர்ந்துள்ளது. எஸ்பி குழு­மம் நேற்று இத­னைத் தெரி­வித்­தது.

மின்­சா­ரம் உற்­பத்தி செய்­வ­தற்­கான எரி­பொ­ருளின் விலை கூடியுள்ளதே மின்­சார விலை உயர்­ந்ததற்­கான கார­ணம் என்று விளக்­கம­ளிக்­கப்­பட்­டது.

ஒரு கிலோ­வாட் மணி நேரத்­திற்கு மின்­சா­ரக் கட்­ட­ணம் 23.38 காசி­லி­ருந்து 24.11 காசாக உய­ரும் (பொருள், சேவை வரிக்கு முன்­பாக). கடந்த ஆண்டு ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான காலாண்­டுக்­குப் பிறகு, மின்­சா­ரக் கட்­ட­ணம் இந்த அளவு கூடியது இதுவே முதன்­முறை.

இதன் மூலம், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக நான்­கறை வீடு­களில் வசிப்­போ­ருக்­கான சரா­சரி மின்­சா­ரக் கட்­ட­ணம் மாதத்­திற்கு $2.49 உயரும் என்றது எஸ்பி குழு­மம்.

எரி­சக்தி சந்தை ஆணை­யம் நிர்­ண­யித்­துள்ள வழி­காட்­டு­தல் ­க­ளின் அடிப்­ப­டை­யில், காலாண்­டுக்கு ஒரு­முறை மின்­சா­ரக் கட்­ட­ணங்­களை எஸ்பி குழு­மம் மறு­ஆய்வு செய்து வரு­கிறது.

எரிவாயுக் கட்டணமும் உயர்வு

வீடுகளுக்கான எரிவாயுக் கட்டணம் இந்தக் காலாண்டில், ஒரு கிலோ­வாட் மணி நேரத்­திற்கு 0.57 காசு உய­ரும் என்று சிட்டிகேஸ் நிறுவனம் நேற்று கூறியது.

அதாவது எரிவாயுக் கட்டணம், ஒரு கிலோ­வாட் மணி நேரத்­திற்கு 18.47 காசி­லி­ருந்து 19.04 காசாக உய­ரும் (பொருள், சேவை வரிக்கு முன்­பாக).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!