வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டுக் கடனையும் அரசாங்க வாடகை வீடுகளுக்கான வாடகையையும் உரிய நேரத்தில் செலுத்தாமல் போனால் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் மேலும் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்.
அந்தக் கூடுதல் கூட்டணம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தாமதத்துக்கான கூடுதல் கட்டணங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நடவடிக்கை மேலும் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. நேற்று அது முடிவடைய வேண்டியிருந்தது.
கூடுதல் கட்டணங்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வசூலிக்கப்படாது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு டெஸ்மண்ட் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டிலிருந்து மெல்ல மீட்படைந்து வந்தபோதும், சிங்கப்பூரர்கள் மீண்டு வருவது தொடர்வதாக அவர் கூறினார்.

