மைசூரிலிருந்து இங்கு குடியேறியுள்ள இரண்டு இளம் ஒட்டகச்சிவிங்கிகள்

இந்­தி­யா­வின் மைசூர் விலங்­கி­யல் தோட்­டத்­தி­லி­ருந்து, அரு­கி­வ­ரும் இனத்­தைச் சேர்ந்த இரண்டு இளம் ஒட்­ட­கச்­சி­விங்­கி­கள் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­துக்கு வந்து சேர்ந்­துள்­ளன. இவை, விலங்­கி­யல் தோட்­டத்­தின் மேற்கு ஆப்­பிரிக்கா பகு­தி­யில் நேற்று முதல் பொது­ மக்­கள் பார்­வைக்கு வைக்­கப்­பட் ­டுள்­ளன.

பாலாஜி, அடில் எனும் இந்த இரண்டு ஒட்­ட­­கச்­சிவிங்­கி­க­ளுக்­கும் சுமார் ஒரு வய­தா­கிறது. இவை மிக­வும் அருகி வரும் ரோத்ஸ்­சைல்ட் (Rothschild) வகை ஒட்­ட­கச்­சி­விங்­கி­க­ளா­கும். தற்­போது இரண்­டா­யி­ரத்­துக்­கும் குறை­வான இந்த வகை ஒட்­ட­கச்­சிவிங்­கி­கள் தான் காடு­களில் உள்­ளன.

மாநி­லம் விட்டு மாநி­லம் 22 மணி­நே­ரம் சாலை வழி­யா­க­வும் ஏழு நாள் கப்­ப­லி­லும் பய­ணம் செய்து, கடந்த மே மாதத்­தில் ஒட்­ட­கச்­சி­விங்­கி­கள் ஜூரோங் துறை­மு­கத்தை அடைந்­தன.

கொவிட்-19 நோய்ப் ­ப­ர­வ­லால் விமா­னம் வழி இரண்டு ஒட்­ட­கச்­சி­விங்­கி­க­ளை­யும் கொண்­டு­வர முடி­ய­வில்லை என்று சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம் கூறி­யது.

வேக­மாக வளர்ந்­து­வ­ரும் ஒட்­ட­கச்­சிவிங்­கி­களை சில காலத்­துக்­குப் பின்­னர் எந்­த­வி­த­மான போக்கு­ வ­ரத்­தி­லும் வேறு இடத்­துக்கு மாற்ற முடி­யாது. அத­னால், அவர்­களை இவ்­வாறு கொண்­டு­வ­ரு­வது பற்றி குழு ஆராய்ந்­த­தாக விலங்­கி­யல் தோட்­டம் கூறி­யது.

இரண்­டை­யும் பிஏ­சிசி கப்­பல் நிறு­வ­னத்தை நடத்­தும் குவொக் சிங்­கப்­பூர் நிறு­வ­னம் தத்து எடுத்­துக்­கொண்­டுள்­ளது.

இரண்டு ஒட்­ட­கச்­சிவிங்­கி­களும் பிஏ­சிசி கப்­பல்­களில் ஒன்­றில்­தான் இங்கு வந்து சேர்ந்­தன.

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் ஏற்கெனவே வசிக்­கும் அப்பா பிள்­ளை­யான மார்க்கோ, ஜூபிலி, ஒட்­ட­கச்­சி­விங்­கி­க­ளு­டன் புதிய வர­வு ­க­ளு­டன் தங்­கும்.

இங்­கேயே நிரந்­த­ர­மா­கத் தங்­க­வுள்ள இரண்டு ஒட்­ட­கச்­சிவிங்­கி­களும் 20 முதல் 25 ஆண்­டு­கள் வரை உயிர் வாழும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­ட­மும் மைசூர் விலங்­கி­யல் தோட்­ட­மும் கடந்த 2010லிருந்து விலங்கு ­க­ளைப் பரி­மா­றிக் கொண்டு வரு­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!