செலவுகளைக் குறைக்க உதவும் புதிய சமையல் மையம்

செலவுகளைக் குறைக்க உதவும் புதிய சமையல் மையம்

1 mins read
576f241d-6a8b-4263-b426-7eb608c7e8ba
-

சமை­ய­லுக்­கான இடம், கிடங்­கு­கள் உள்­ளிட்ட வச­தி­களுடன் 22,000 சதுர மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட சமை­யல் மையத்தை இங்­குள்ள உணவு விநி­யோக நிறு­வ­னம் ஒன்று தொடங்­கி­யுள்­ளது.

உணவு பானத் துறை நிறு­ வனங்­கள் வளங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் அவ­சி­யச் செல­வு­களைக் குறைக்­க­வும் உதவி செய்­வது அதன் நோக்­க­மா­கும்.

பாண்­டான் லூப்­பில் உள்ள ஸ்பேஸ் கட்­ட­டம், எக்ஸ்-இங்க் உணவு விநி­யோக நிறு­வ­னத்­தின் தலை­மை­ய­க­மா­க­வும் செயல்­ப­டு­கிறது. அந்த ஆறு மாடி கட்டடம் ,சுமார் மூன்று காற்­பந்துத் திடல்­கள் அள­வுக்குப் பரந்­தி­ருக்­கிறது.

கேரட் பாப்­கார்ன், தி ஐஸ் கிரீம் குக்கீ அண்ட் கோ உள்­ளிட்ட சிறப்புப் பொட்­டல உணவு நிறு­வ­னங்­கள் புதிய மையத்­தில் வாட­கைக்கு இடம் எடுத்­துள்­ளன.

உணவு விநி­யோ­கம், உணவு தயா­ரிப்பு ஆகி­வற்­று­டன், ஸ்பேஸ் கட்­ட­டத்­தில் புதிய உண­வு­வ­கை­களை உரு­வாக்­கவும் சோதித்துப் பார்க்கவும் இடம் உண்டு.

இது­வரை, பாப்­கார்னை வேறு கிடங்­கில் வைத்­து­விட்டு, அங்­கி­ருந்து வேறு இடத்­தில் உள்ள சமை­யல் கூடத்தில் தயா­ரித்­து­விட்டு பின்­னர் அதைக் கிளை­க­ளுக்­குக் கொண்டு சென்­றது கேரட் பாப்­கார்ன் நிறு­வ­னம்.

"இப்­போது கிடங்­கும் சமை­யல் கூடமும் ஓர் இடத்­தில் உள்­ளன. நாங்­களே அவர்­க­ளுக்­காக கிளை­களில் பாப்­கார்னை விநி­யோ­கித்து விடு­கி­றோம்," என்­றார் எக்ஸ்-இங்க் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி நிக்­கோல் இங்.