இணையவழி வகுப்புகளுக்கு மாறும் பல்கலைக்கழகங்கள்

இணையவழி வகுப்புகளுக்கு மாறும் பல்கலைக்கழகங்கள்

1 mins read
489a5944-c4a3-4bb8-90a4-999b2c72d79d
-

இங்­குள்ள மூன்று உள்­ளூர்ப் பல்­ க­லைக்­க­ழ­கங்­கள், கொவிட்-19 தொற்று அதி­க­ரிப்­பின் கார­ண­மாக நேரடி வகுப்­பு­க­ளைக் குறைத்து வரு­கின்­றன.

இணை­யம் வழி­யான வகுப்­பு­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் நேரடி வகுப்­பு­கள் தேசிய பாது­காப்பு வழி­காட்­டி­க­ளுக்கு ஏற்ற வகை­யில் தொட­ரும் என்றும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் கூறி­யது. நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் இம்மாதம் 22ஆம் தேதி வரை இணையம் வழியாக வகுப்பு­களை நடத்துகிறது.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம், நேற்று முதல் அதன் விரி­வு­ரை­கள், கருத்­த­ரங்­கு­கள், சிறு­ வகுப்­பு­கள் ஆகி­ய­வற்றை இணை­யத்­தில் நடத்­தத் தொடங்­கி­யது.

செய்­முறை வகுப்­பு­க­ளுக்­கும் ஆய்­வுக்­கூடப் பயிற்சிகளுக்கும் மாண­வர்­கள் நேர­டி­யாக செல்­வார்­கள் என்று அது தெரி­வித்­தது.

கிரு­மித்­தொற்று மீண்­டும் பெருகு­வ­தற்கு முன்­னரே, வகுப்­பு­கள் பெரும்­பா­லும் இணை­யம் வழி­யாக நடத்­தப்­பட்­டதாக சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்கலைக்­க­ழ­க­மும் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழ­க­மும் கூறின.