சுற்றுப்புற ஆணையம்: காற்றுத் தரம் கடந்தாண்டு மேம்பட்டது

சுற்றுப்புற ஆணையம்: காற்றுத் தரம் கடந்தாண்டு மேம்பட்டது

1 mins read
2649b451-70e7-412e-bad5-3e3a3894b418
-

சிங்­கப்­பூ­ரின் காற்­றுத்­த­ரம் கடந்த ஆண்­டின் எல்லா நாளும் 'மித­மான' அல்­லது 'நல்ல' அள­வில் இருந்­த­தாக தேசிய சுற்­றுப்­புற ஆணை­யத்­தின் புதிய ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

மழை கூடி­ய­தும் கொவிட்-19 சூழ­லால் பொரு­ளி­யல், போக்­கு­ வ­ரத்து நட­வ­டிக்­கை­கள் குறைந்­த­தும் அதற்­குக் கார­ணங்­கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டது.

எனி­னும், சிங்­கப்­பூ­ரின் காற்­றுத் தரக் குறி­யீட்­டின் பல தனிப்­பட்ட அம்­சங்­கள், உலக சுகா­தார அமைப்­பின் புதிய தர அள­வு­களை எட்­ட­வில்லை.

வழக்­க­மாக அவ்­வ­ளவு மழை பெய்­யாத செப்­டம்­பர், அக்­டோ­பர் மாதங்­களில் கடந்த ஆண்டு மழை பெய்­த­தால் புகை­மூட்­டம் ஏற்­ப­ட­வில்லை. அத­னால் பிஎம் 2.5 அள­வி­லான மாசுக்­காற்று அதிகரிக்க ­வில்லை என்­றது அறிக்கை.

கடந்­தாண்டு ஏப்­ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் முதல் தேதி வரை நீடித்த கிரு­மிப் பர­வல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது, அதற்கு முந்­தைய மூன்று ஆண்­டு­கள் இல்­லாத அள­வுக்கு காற்றை மாசு­ப­டுத்­தும் வாயுக்­கள் குறைந்து காணப்­பட்­ட­தாக காற்று, நீர்த்தர அறிக்கை தெரி­வித்­தது.