சிங்கப்பூரின் பசுமை முறிகள் முயற்சிகளை முடுக்கிவிட அலுவலகம்

பசுமை முறி­கள் (Green Bonds) துறை­யில் அர­சாங்­கத்­தின் முயற்­சி­களை முடுக்­கி­விடு­வ­தற்­குத் தோதாக ஒரு புதிய அலுவலகம் அமைக்­கப்­பட்டு இருக்­கிறது.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று இதனை அறி­வித்­தார்.

'பசுமை முறி­கள் செயல்­திட்ட அலு­வ­ல­கம்' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் புதிய அலு­வ­ல­கம், நிதி அமைச்­சின் கீழ் செயல்­படும். அது வாரி­யங்­க­ளோடு சேர்ந்து செயல்­பட்டு பசுமை முறி செயல்­திட்­டங்­களுக்­கான ஓர் ஏற்­பாட்டை உரு­வாக்­கும்.

தொழில்­து­றையை ஈடு­ப­டுத்து­வ­தோடு முத­லீட்­டா­ளர்­க­ளு­டன் கூடிய உறவு­க­ளை­யும் அது நிர்­வ­கிக்­கும்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கடந்த ஆகஸ்ட் மாதம் $3 பில்­லி­யன் பல நாணய நடுத்­த­ர­கால பங்கு மற்­றும் பசுமை முறி வெளி­யீடு ஏற்­பாட்டை தோற்­று­வித்­தது.

அந்­தப் பங்கு வெளி­யீடு மூலம் கிடைக்­கும் தொகை 'துவாஸ் நெக்­சஸ்' போன்ற சுற்­றுச்­சூ­ழல் உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்கு நிதி அளிக்க பயன்­ப­டுத்­தப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் கரிம வரி தொடர்­பில் நிதி அமைச்சு பரி­சீ­ல­னை­களை நடத்தி வரு­வ­தா­க­வும் அடுத்த ஆண்டு வர­வு­செலவுத் திட்­டத்­தில் இதன் தொடர்­பில் புதிய தக­வல்­கள் இடம்­பெ­றும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் சுற்­றுச்­சூ­ழல் முத­லீடு மற்­றும் நிதித்­துறை மாநாட்­டில் நேற்று அமைச்­சர் பேசி­னார்.

அந்த மாநாடு நேர­டி­யா­க­வும் இணையம் மூல­மா­க­வும் நடந்­தது. பசுமை நிதி சுற்றுச்­சூ­ழல் ஏற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்த பல்வேறு திட்­டங்­கள் குறித்து சிங்­கப்­பூர் ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

இதில் முத­லா­வ­தாக கரி­மக் குறைவு வர்த்­த­கச் சான்­றி­தழ் சந்­தையை மேம்­படுத்த சிங்­கப்­பூர் திட்­ட­மி­டு­கிறது.

பசுமை முத­லீ­டு­க­ளுக்­கான வளங்­க­ளை­யும் தேவை­க­ளை­யும் பெருக்­கு­வ­தற்குத் தோதான நீடித்த நிதி மற்­றும் முத­லீட்டு வாய்ப்­பு­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக சிங்­கப்­பூர் செயல்­படும். அர­சாங்­கம் இதில் முன்­னின்று வழி­காட்டும் என்­றார் அவர்.

இந்த வட்­டா­ரத்­தில் பரு­வ­நிலை மாற்றத்தை சமா­ளிக்க தனி­யார் துறை முயற்சி­கள் பெரிதும் வர­வேற்­கப்­படு­வ­தாக திரு வோங் கூறி­னார்.

பசுமை நிதி வளத்­திற்கு ஆத­ர­வாக நிதித் துறை­யில் வலு­வான ஆற்­ற­லை­யும் அனு­ப­வத்­தை­யும் பலப்­ப­டுத்­து­வது, சிங்­கப்­பூர் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் மூன்றா­வது துறை என்­றார் அமைச்சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!