நாணயக் கொள்கையில் மாற்றமிராது என எதிர்பார்ப்பு

சிங்­கப்­பூ­ரின் மத்­திய வங்கி தன்னு­டைய அக்­டோ­பர் மாத மறு­ப­ரி­சீ­ல­னை­யின்­போது நாணயக் கொள்­கையை மாற்­றம் இல்­லா­மல் வைத்­தி­ருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

கொவிட்-19 டெல்டா கிருமி உள்­ளூ­ரி­லும் உல­கி­லும் வேக­மாகப் பர­வு­வ­தை­யும் அத­னால் பொரு­ளி­யல் மீட்­சிக்கு மிரட்­டல் ஏற்­ப­டு­வ­தை­யும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.

ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் 11 பொரு­ளி­யல் வல்­லு­நர்­களை உள்­ள­டக்கி இந்த வாரம் ஆய்வு ஒன்றை நடத்­தி­யது.

சிங்­கப்­பூர் மத்­திய வங்­கி­யான சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அக்­டோ­பர் 14ஆம் தேதி­யன்று அல்­லது அதற்கு முன்­ன­தாக தன்­னு­டைய நாண­யக் கொள்கை மறு­ப­ரி­சீ­ல­னையை நடத்­தும்.

நாணய பரி­வர்த்­தனை அடிப்­படை­யி­லான கொள்­கை­களில் மாற்­றம் எதை­யும் ஆணை­யம் செய்­யாது என்று தாங்­கள் எதிர்­பார்ப்­ப­தாக அந்த வல்­லு­நர்­கள் அனை­வ­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

இப்­போ­தைய கொவிட்-19 தொற்று நிலை­யில் தன்­னு­டைய நாண­யக் கொள்­கையை மத்­திய வங்கி இன்­னும் கடு­மை­யாக்­காது என்றே தெரி­வ­தாக 'மூடிஸ்' நிறு­வனத்­தின் பகுப்­பாய்­வா­ளர் டெனிஸ் சியோக் கூறு­கி­றார்.

நாணய பரி­வர்த்­தனை விகிதங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தன்­னு­டைய நாண­யக் கொள்­கைகளை இந்த ஆணை­யம் நிர்­வகித்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் முக்­கி­ய­மான வர்த்­தக பங்­காளி நாடு­க­ளின் நாண­யங்­க­ளுக்கு எதி­ரான சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு உயர அல்­லது குறைய அந்­தக் கொள்கை அனு­ம­திக்­கிறது.

அடுத்த ஆண்டு ஏப்­ர­லில் ஆணை­யம் தன்­னு­டைய கொள்­கையை கடுமையாக்கக்கூடும் என்று ஐந்து பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!