பயனீட்டாளர் சங்கத்தின் புதிய இலக்குகள் பற்றி புதிய தலைவர்

1 mins read
4b045b55-7c63-40db-ba9b-86cd02a5bf26
-

'கேஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் பயனீட்­டா­ளர் சங்­கத்­தின் புதிய தலை­வராக மூன்­றாண்டு காலத்­திற்கு ராடின் மாஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு மெல்­வின் யோங் பொறுப்­பேற்று இருக்­கி­றார்.

இணை­யம் வழி பொருட்­களை வாங்­கு­வோரை இன்­னும் சிறந்த முறை­யில் பாது­காக்க வேண்­டும்; நியா­ய­மற்ற நடை­முறை­களைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும் என்­ப­து அவர் சாதிக்க விரும்பும் அம்சங்களில் உள்ளடங்கும்.

தொடக்­க­மாக சிகை அலங்­காரம், அழகு நிலை­யம், உடம்­புப் பிடி நிலையங்­க­ளு­டன் கேஸ் அமைப்பு செயல்­பட்டு, மன­நி­றை­வற்ற வாடிக்­கை­யா­ளர்­கள் தாங்­கள் செலுத்­திய பணத்­தைத் திருப்பி பெறு­வ­தற்கு ஐந்து நாள் அவ­காசம் அளிக்­கும் ஓர் ஏற்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்­த­லாம் என்று திரு யோங் நம்­பு­கி­றார்.

கேஸ் அமைப்பு முக்­கி­ய­மான பெரிய இணை­யச் சந்தை நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு வாடிக்­கை­யா­ளர்­கள் சச்­ச­ர­வு­க­ளைத் தீர்த்து கொள்­வ­தற்­கான முறை­யான ஏற்­பாடு ஒன்றை உரு­வாக்­கும்.

இணையக் கருத்­த­ரங்கு ஒன்றுக்கும் அது ஏற்­ப­ாடு செய்யும்.

தவணை முறை­யில் பொருட்­களை வாங்­கும் பய­னீட்­டா­ளர்­கள் எதிர்­நோக்­கக்­கூ­டிய ஆபத்­து­கள் பற்றி அவர்­க­ளி­டம் சில்­லறை வர்த்­த­கர்­கள் எடுத்­துக்­ கூ­று­வதை நடை­மு­றைப்­ப­டுத்­தும் புதிய சட்­டங்­கள் தேவை என்று கேஸ் அமைப்பு கோரிக்கை விடுக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.