பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டும் மூத்தோர்

2 mins read
9511f6c3-e776-41da-b014-ad9625688b0f
பீஷான் தடுப்பூசி நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கும் மூத்தோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அறுபது வய­துக்கு மேற்­பட்ட அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும், நிரந்­த­ர­வா­சி­களும் நீண்­ட­கால அனு­மதி பெற்­றோ­ரும் தடுப்­பூசி நிலை­யங்­கள், பல­துறை மருந்­த­கங்­க­ளுக்கு முன்­னேற்­பாடு இல்­லா­மல் சென்று பூஸ்­டர் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று சுகா­தார அமைச்சு நேற்று முன்தினம் அறி­வித்­ததை அடுத்து முதியோர் பலர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

சேவைத்­து­றை­யில் பணி­பு­ரி­யும் 68 வயது திரு­வாட்டி சூசன் சியோங், அதி­க­ரித்­து­வ­ரும் நோய்த்­தொற்று சம்­ப­வங்­க­ளால் பூஸ்­டர் தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொள்ள விரும்­பி­னா­லும் முன்­னேற்­பா­டு­கள் செய்ய இய­ல­வில்லை என்று கூறி­னார். ஆனால், புதிய வசதியினால் நேற்று காலை­யில் அவர் பீஷான் தடுப்­பூசி நிலை­யத்­துக்­குச் சென்று பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொண்­ட­தா­கக் கூறி­னார்.

பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள செங்­காங் தடுப்­பூசி நிலை­யத்­துக்கு நேற்று சென்ற மூத்­தோ­ரில் ஏறத்­தாழ 30 விழுக்­காட்­டி­னர் முன்­னேற்­பா­டு­கள் செய்­து­கொள்­ளா­த­வர்­கள் என சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தைச் சேர்ந்த திரு எல்­வின் இங் குறிப்­பிட்­டார். இந்த புதிய ஏற்­பாடு மூத்­தோ­ரி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

சென்ற வாரத்­தி­லி­ருந்தே மூத்­தோர் முன்­னேற்­பா­டு­கள் இன்றி பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டிருக்கின்றனர். இச்­சேவை, பொது சுகா­தார தயார்­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் வழங்­கப்­படும்.

பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெற மூத்­தோர் தங்­க­ளது இரண்­டாம் தடுப்­பூ­சி­யைக் குறைந்­தது ஆறு மாதங்­க­ளுக்கு முன்பே போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும். ஏப்ரல் 1 அல்­லது அதற்கு முன்பு இரண்­டாம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் தங்­க­ளது மூன்­றாம் தடுப்­பூ­சி­களை முன்­னேற்­பா­டு­கள் இன்றி போட்­டுக்­கொள்­ள­லாம். மற்­ற­வர்­கள் பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெற இரண்­டாம் தடுப்­பூசி போட்டு குறைந்­தது ஆறு மாத கால­மா­வது காத்­தி­ருக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது. பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள செப்­டம்­பர் 15ஆம் தேதி­யில் இருந்து 60 வய­துக்கு மேற்­பட்ட 500,000 மூத்­தோ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­தது. இவர்­க­ளுள் 215,729 பேர் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தா­க­வும் 119,000 பேர் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­னேற்­பா­டு­கள் செய்­துள்­ள­தா­க­வும் அமைச்சு கூறி­யது. இதற்­குத் தகுதி பெறும் அனைத்து மூத்­தோ­ரை­யும் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மாறு அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள குடும்­பத்­தில் உள்ள மூத்­தோரை குடும்ப உறுப்­பி­னர்­கள் ஊக்­கு­விக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டார்.