ஆரோக்கிய உணவு: சமையல் வகுப்பு

ஆரோக்கிய உணவு: சமையல் வகுப்பு

2 mins read
99214671-8cb6-4e3c-a031-6dae24fbb277
-

புதிய சமை­யல் குறிப்­பு­க­ளைத் தேடிப் பெற்­றுக்­கொள்ள ஓய்வு பெற்ற 68 வயது திரு­வாட்டி கோ கெக் கின்­னுக்கு பிடிக்­கும். மன வளர்ச்சி குன்­றிய தமது 35 வயது மகள் கிளா­டிஸ் கோவுக்­குப் பிடித்த உணவு­க­ளைச் சுவா­ர­சி­ய­மான முறை­யில் சமைத்­துப் பரி­மாற அவர் விரும்­பு­கி­றார்.

தமது மக­ளுக்கு இதய குறை­பா­டும் மூச்­சி­ரைப்­பும் இருப்­ப­தால், அவர் ஆரோக்­கி­ய­மான உணவு உட்­கொள்­வது கட்­டா­யம்.

ஆனால் திரு­வாட்டி கோவின் மக­ளுக்­குக் காய்­க­றி­கள் பிடிக்­காது. மேலும் உண­வுக்­குச் சுவை­யூட்­டும் உப்பு, எண்­ணெய், போன்­ற­வற்றை அவர் அள­வோடு மட்­டுமே உட்­கொள்ள வேண்­டும்.

நேற்று திரு­வாட்டி கோவும் அவ­ரது மகளும் புது சமை­யல் வகுப்­பில் கலந்­து­கொள்ள அழைக்­கப்­பட்­ட­னர். எளி­தில் கிடைக்­கக்­கூ­டிய பொருட்­களைக் கொண்டு ஆரோக்­கி­ய­மான உண­வைத் தயா­ரிப்­ப­தைப் பற்றி அவ்­வ­குப்­பில் கற்­றுக்­கொள்­ள­லாம். இவ்­வ­குப்பு வசதி குறைந்­தோ­ருக்கு உணவு நன்­கொடை ஏற்­பா­டு­கள் செய்­யும் 'ஃபூட் பேங்க் சிங்­கப்­பூர்' என்ற அற­நி­று­வ­னத்­தால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

'மசாக் மசாக்' (மாலாய் மொழி­யில் சமை என்ற பொருள் கொண்­டது) எனப்­பெ­ய­ரி­டப்­பட்­டுள்ள ஆரோக்­கி­ய­மான உண­வு­களை உட்­கொள்­வ­தைப் பற்­றி­யும் அவற்றை சமைக்கும் முறை பற்றியும் குறைந்­தோ­ருக்கு கற்­றுக்­கொ­டுப்­பதே இந்த மாதாந்­தர வகுப்­பின் நோக்­கம்.

தன்­னார்­வ­ல­ரான சமை­யல்­ நிபுணர் ஒரு­வர் நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்ட உண­வுப் பொருட்­க­ளைக் கொண்டு ஆரோக்­கி­ய­மான உண­வைச் சமைத்துக் காட்­டு­வார்.

2025ஆம் ஆண்­டுக்­குள், வச­தி­யின்­மை­யால் தர­மான உணவு கிடைக்­காத சூழ­லைப் போக்­கு­வ­தற்கு 'சிங்­கப்­பூர் ஃபூட் பேங்' அமைப்பு இலக்கு கொண்­டுள்­ளது. அதன் ஒரு பகு­தி­யாக இந்த முன்­னோ­டித் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

வகுப்­பு­களில் உணவு சமைக்க கற்­றுக்­கொ­டுக்க விரும்­பு­வோர், 'enquiries@foodbank.sg' என்ற முகவரிக்கு மின்­னஞ்­சல் அனுப்­ப­லாம்.