கொவிட்-19 தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக நேற்று முன்­தி­னம் இரண்டு முதி­ய­வர்­கள் உயி­ரி­ழந்­த­னர். அவர்­கள் இரு­வ­ரும் பெண்­கள். ஒரு­வ­ருக்கு வயது 79, மற்­றொ­ரு­வ­ருக்கு வயது 87.

அவ்­வி­ரு­வ­ரும் உடல்­ந­லக் குறை­பா­டு­கள் கார­ண­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

தொடர்ந்து 11வது நாளாக கொவிட்-19 உயி­ரி­ழப்­பு­கள் பதி­வாகி வரு­கின்­றன.

வியா­ழக்­கி­ழமை அன்று புதி­தாக 2,478 பேர்க்கு கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. அவர்­களில் 2,022 தொற்­றுப் பதி­வு­கள் சமூக அள­வி­லா­னவை.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­யில் 452 பேர்க்கு கிரு­மித் தொற்று பதி­வா­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் நான்கு பேர் வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­கள். இந்த நான்கு பேருக்கும் சிங்­கப்­பூர் வந்து இறங்­கி­ய­தும் தனிமை உத்­த­ரவு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சமூக அள­வில் பதி­வா­ன­வற்­றில் 535 பேர் 60 வய­தைத் தாண்­டி­ய­வர்­கள்.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 1,360 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இது புதன்­கி­ழ­மை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் 25 பேர் அதி­கம். இவர்­களில் 204 பேருக்கு உயிர்­வாயு தேவைப்­ப­டு­கிறது. 34 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

உடல்­நிலை மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ரில் 197 பேர் 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள்.

இப்­போது கொவிட்-19 நோயா­ளி­கள் 1,325 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அவர்­களில் 209 பேர்க்­குச் செயற்கை உயிர்­வாயு தேவைப்­ப­டு­கிறது; 30 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

உடல்­நிலை மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ரில் 201 பேர் 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை கொரோனாவால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 96,521 ஆகி­யுள்­ளது.

புதிதாக 2,478 பேர் பாதிப்பு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!