‘தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கர்ப்பிணிகளுக்கு மன நிம்மதி கிடைக்கிறது’

கர்ப்­பி­ணி­யாக இருந்த தம்மை கொவிட்-19 கிருமி தொற்றி, மகப்பேற்றில் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­விடுமோ என அஞ்சி திரு­வாட்டி சுஸேனா டேங், தமது பேறு காலத்தின் 30வது வாரத்­தில் தடுப்­பூ­சி­ போட்­டுக்­கொண்­டார்.

இணை­யத்­தில் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­வ­து பற்றி பல்வேறு கருத்­துக்­களை வாசித்த திரு­வாட்டி டேங், தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள முத­லில் தயங்­கி­னார்.

ஆனால், "நான் இது குறித்து சுய­மா­கக் ஆராய்ந்­தேன். இது குறித்து மேற்­கொள்­ளப்­பட்ட பல ஆய்­வு­க­ளைப் பற்றி நான் படித்­தேன்.

கர்ப்­பி­ணி­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதால் ஏற்படும் தீமை­க­ளை­விட நன்­மை­கள் அதி­க­மாக இருக்­கின்­றன என்ற முடி­வுக்கு வந்­தேன்," என கூறி­னார்.

மேலும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத கர்ப்­பி­ணி­க­ளுக்­கு கொள்ளை நோய் தொற்­றி­னால் பேறுகாலத்தில் சிக்­கல்­கள் ஏற்­படும் அபா­யம் அதி­கம் என்­றும் அவ்­வாறு ஏற்­ப­டு­கை­யில் பிர­ச­வத்­திற்­குப் பிறகு, தனிமைப்படுத்தலால் குழந்­தை­யைப் பிரிய தாம் விரும்­ப­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

கேகே மக­ளிர் சிறார் மருத்­து­வ­ம­னை­யில் தடுப்­பூ­சி­ போட்­டுக்­கொண்ட திரு­வாட்டி டேங், சென்ற மாதம் தமது மகனை ஈன்­றெ­டுத்­தார்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் உள்ள கர்ப்­பி­ணிப் பெண்­களில் 85 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளா­த­வர்­கள் என சுகா­தார    , தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் செப்­டம்­பர் 29ஆம் தேதி பதி­விட்­டார்.

அதில் 20 விழுக்­காட்­டி­ன­ருக்­குக் உயிர்­வாயு தேவைப்­ப­டு­வ­தா­க­வும் 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு தீவி­ர சிகிச்சை தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

ஆனால், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு இதுவரை உயிர்­வாயு தேவைப்­படும் நிலை வர­வில்லை என்­ப­தை­யும் அமைச்­சர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!