வாகனங்கள்-சைக்கிள்கள் இடைவெளி 1.5 மீட்டர்

சைக்கிள்களுக்குப் பதிவு தேவையில்லை; ஒரு வரிசையில் ஐந்து சைக்கிள்கள் வரை செல்லலாம்

சாலை­யில் சைக்­கி­ளோட்­டு­தல் தொடர்­பான விதி­மு­றை­களை ஆரா­யும் குழு தனது பரிந்­து­ரை­களை வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி, சாலை­யில் செல்­லும்­போது அதி­க­பட்­ச­மாக ஐந்து சைக்­கிள்­கள் ஒரே வரி­சை­யில் ஒன்­றன்­பின் ஒன்­றா­கச் செல்­ல­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

"அப்­படி அந்­த சைக்­கிள் குழு மெது­வாக செல்­வது என்­றால் அது ஒரு பேருந்­தின் நீள அள­வில் இருக்க வேண்­டும்," என்று 'ஏஎம் ஏபி' எனும் உந்து நட­மாட்ட ஆலோ­ச­னைக் குழு தெரி­வித்­தது.

இது­போன்ற மேலும் பல பரிந்­து­ரை­கள் அடங்­கிய அறிக்கை நேற்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ர­னி­டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக தற்­ச­ம­யம் சைக்­கி­ளுக்கு பதிவோ உரி­மமோ தேவைப்­ப­டாது என்­றும் குழு சொன்­னது.

"சைக்­கிள் பதிவு, உரி­மம் போன்­றவை சைக்­கி­ளோட்­டு­வதை ஒரு பொழு­து­போக்­காக கொண்­டுள்­ள­வர்­கள் அந்­தப் பழக்­கத்தை மேற்­கொள்­ளா­மல் போக­ச் செய்யலாம். மேலும் வேலைக்கு சைக்­கி­ளில் செல்­லும் மூத்­தோர், தனி­ந­பர்­களுக்கு அது பாதிப்பை ஏற்­ப­டுத்தி­வி­டும்.

"மற்ற நாடு­க­ளின் வழக்­கங்­களை வைத்துப் பார்க்­கும்­போது, இப்­ப­டிப்­பட்ட விதி­மு­றை­கள் கண்­மூ­டித்­த­ன­மாக சைக்­கி­ளோட்­டு­தலைக் குறைத்­து­வி­ட­வில்லை அல்­லது சாலைப் பாது­காப்பை மேம்­படுத்­தி­வி­ட­வில்லை," என்­றும் ஆலோ­ச­னைக் குழு விவ­ரித்­தது.

இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட தடங்­கள் உள்ள சாலை­யில் சைக்­கி­ளோட்­டி­கள் இரு­வர் இரு­வ­ரா­கச் செல்­ல­லாம் என்று பரிந்­து­ரைக்­கும் 'ஏஎம்­ஏபி' குழு, அது சாலையில் செல்வோர் அவர்­க­ளைத் தெளி­வா­கப் பார்க்க வழிவகுப்­ப­து­டன் அது அதிக பாது­காப்­பை­யும் ஏற்­ப­டுத்­தும் என்று கூறி­யது.

மேலும் சாலை விதி­மு­றை­கள் தொகுப்பு புத்­த­கத்­தி­லும் வாக­ன­மோட்­டும் தேர்­வுப் புத்­த­கத்­தி­லும், சைக்­கி­ளோட்­டி­கள் பற்­றிய இந்­தப் புதிய விதி­மு­றை­கள் உள்­ள­டக்­கப்­படும்.

அதில் சாலை­களில் செல்­லும் வாக­ன­மோட்­டி­க­ளுக்­கும் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்­கும் குறைந்­தது 1.5 மீட்­டர் இடை­வெளி இருக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தப்­படும்.

இந்த விதி­முறை முக்­கி­ய­மா­னது. கார­ணம், சாலை­களைப் பயன்­படுத்­தும் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு விபத்து ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு அதி­கம் உள்­ளது. தனது பரிந்­து­ரை­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால், அது விரை­வில் அமல்­படுத்­தப்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்ட குழு, அவ்­வாறு அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன் இது தொடர்­பான பொது­மக்­க­ளின் விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­தும் நட­வடிக்­கை­களும் அவ­சி­யம் என்­றது.

"சைக்­கி­ளோட்­டி­கள் பொது­வாக சாலை விதி­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­வர்­க­ளாக இருப்­ப­தால், சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு எதி­ராக செயல்­படு­ப­வர்­க­ளுக்­குக் கடு­மை­யான தண்­டனை விதிக்க அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். சாலைப் பாது­காப்பை உறுதிசெய்­வது அனை­வ­ரின் பொறுப்பு," என்­றும் 'ஏஎம்­ஏபி' குழு தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இது குறித்து தமது ஃபேஸ்புக்­கில் கருத்­து­ரைத்த போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், "இந்­தப் பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் ஆராய்ந்து தனது முடி­வைத் தெரி­விக்­கும்.

"இப்­போது சாலை­க­ளைப் பயன்­ப­டுத்­தும் சைக்­கி­ளோட்­டி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­திருப்­ப­தால், பரிந்­து­ரை­கள் அனை­வரது பாது­காப்­பை­யும் உறுதி செய்­யும் வகை­யில் உள்­ள­னவா என்­பது ஆரா­யப்­படும்," என்று கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!