‘பத்தாண்டு’ கடப்பிதழ் பெற விரையும் சிங்கப்பூரர்கள்

இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் கடப்பிதழ்கள் பத்தாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்பதால், கடப்பிதழ்களைப் புதுப்பிக்க சிங்கப்பூரர்கள் விரைகின்றனர்.


முதல்நாளான நேற்றே தனது இணையவாயில் வழியாக கிட்டத்தட்ட 2,500 கடப்பிதழ் விண்ணப்பங்கள் வந்துசேர்ந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.


இவ்வாண்டு ஜனவரி முதல் சராசரியாக நாள்தோறும் வழங்கப்பட்ட கடப்பிதழ்களைக் காட்டிலும் இது நான்கு மடங்கிற்கும் அதிகம்.


கடப்பிதழ் விண்ணப்பங்கள் கூடியிருப்பது, அனைத்துலகப் பயணம் மேற்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருப்பதைக் காட்டுகிறது என்று சுற்றுப்பயண நிறுவனங்கள் கூறின.


அத்துடன், ஆண்டிறுதியில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வது தொடர்பில் அதிகமானோர் தங்களைத் தொடர்புகொண்டு விசாரித்ததாகவும் அவை குறிப்பிட்டன.


பத்தாண்டுகளுக்குச் செல்லத்தக்க கடப்பிதழ்கள் சிங்கப்பூரர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் செலவைக் குறைக்கவும் உதவும் என்றும் சொன்னார் திருவாட்டி சுமதி ராஜேந்திரன், 32.


வரும் டிசம்பர் மாதத்தில் சொகுசுக் கப்பல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், தம் ஆறு வயது மகனின் கடப்பிதழை அவர் புதுப்பிக்கவுள்ளார்.


ஆயினும், 16 வயதுக்கும் குறைந்த சிங்கப்பூரர்களின் கடப்பிதழ் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.


அதேவேளையில், இப்போது 70 வெள்ளியாக இருக்கும் கடப்பிதழ் விண்ணப்பக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


கடப்பிதழ் வைத்திருப்பது கட்டாயமல்ல என்றும் கடப்பிதழ் காலாவதியாகி, அதைப் புதுப்பிக்காவிடில் அபராதம் விதிக்கப்படாது என்றும் ஆணையம் தெரிவித்தது.


ஆணையத்தின் இணையத்தளம் (www.ica.gov.sg) வழியாகக் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.


இம்மாதத்தில் இருந்து, குறிப்பிட்ட 27 அஞ்சல் நிலையங்களில் தங்களது கடப்பிதழை அல்லது அடையாள அட்டையைச் சேகரிக்கும் சிங்கப்பூரர்கள், அதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!