சிகிச்சை, மருத்துவமனை வசதிகள் அதிகரிப்பு

1 mins read
d9169128-c00f-4eb1-97ee-3acd9d7e1c11
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கூடி­வ­ரு­வ­தைச் சமா­ளிக்­கும் வகை­யில் மருத்­து­வ­மனை வச­தி­களும் சிகிச்சை வச­தி­களும் அதி­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

இப்­போது 134 தீவிர சிகிச்சை படுக்­கை­கள் இருக்­கின்­றன. இந்த எண்­ணிக்கை 180 ஆக்­கப்­படும் என்று நேற்று நடந்த கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் கூறி­னார்.

கொவிட்-19 சிகிச்சை நிலை­யங்­களில் அமைக்­கப்­படும் மருத்­து­வ­மனை படுக்­கை­களும் உறு­துணை­யா­கத் திக­ழும். கடந்த வாரம் 580 படுக்­கை­க­ளு­டன் இத்­த­கைய நான்கு நிலை­யங்­கள் அமைக்­கப்­பட்­டன.

இந்த நிலை­யங்­க­ளின் எண்­ணிக்கை ஒன்­ப­தாகக் கூட்­டப்­படும். அவற்­றில் ஏறத்­தாழ 3,700 படுக்­கை­கள் இருக்­கும்.

இந்த இலக்கு இம்­மாத முடி­வில் எட்­டப்­படும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இதைச் சாதிக்­கும்­போது மருத்­து­வ­ம­னைக்கு வெளியே நோயாளி­களுக்­குச் சிகிச்சை அளிக்க முடி­யும். இத­னால் மருத்­து­வ­ம­னை­களுக்­குச் சுமை குறை­யும் என்று அவர் விளக்­கி­னார்.

நல்ல உடல்­நி­லை­யு­டன் இருக்­கக்­கூ­டிய ஆனால் குடும்­பத்­தா­ரு­டன் சேர்ந்­தி­ரா­மல் தனி­மை­யில் இருக்­க­வேண்­டிய தேவை உள்­ள­வர்­க­ளுக்­காக சமூகப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் இருக்­கின்­றன.

இவற்­றில் இப்­போது 4,300 படுக்­கை­கள் உள்­ளன என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இதில் மேலும் ஓர் ஏற்­பா­டாக வீட்­டி­லி­ருந்தே குண­ம­டை­யும் செயல்­திட்­டம் நடை­மு­றை­யில் உள்­ளது.

இத்­த­கைய நோயா­ளி­க­ளுக்­கான தொலை மருத்­து­வச் சேவை ஏற்­பாடு மேம்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது என்றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.