மெல்வின் யோங்: பைனியர் மரணத்தையும் சேர்த்து இவ்வாண்டு 30 பேர் வேலையிடத்தில் மரணம்

பைனியர் வட்­டா­ரத்­தில் உள்ள வேலை­யி­டத்­தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­ததை அடுத்து இவ்­வாண்டு இது­வரை வேலை­யி­டங்­களில் மர­ணம் ­அடைந்­த­வர்­களின் எண்­ணிக்கை 30 ஆகி­யுள்­ளது. கொள்­க­லன் விழுந்து நசுக்­கி­ய­தில் அந்த சிங்­கப்­பூ­ரர் உயி­ரி­ழந்­தார்.

சென்ற ஆண்டு முழு­மைக்­கும் வேலை­யிட மர­ணங்­கள் இதே எண்­ணிக்­கை­யில் இருந்­த­தாக ராடின் மாஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் உதவித் தலை­மைச் செய­லா­ள­ரு­மான திரு மெல்­வின் யோங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கூறி­யுள்­ளார்.

இவ்­வாண்டு வேலை­யி­டங்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒன்­பது பேர் கட்­டு­மா­னத் துறை­யை­யும் எட்டு பேர் தள­வா­டப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யை­யும் சேர்ந்­த­வர்­கள் என்று திரு யோங் கூறி­னார். இது இவ்­வாண்டு மொத்த எண்­ணிக்­கை­யில் பாதி­யை­விட அதி­கம் என்று அவர் சுட்­டி­னார்.

"வேலை­யிட விபத்­து­களில் மரணமடைந்தவர்கள் வெறும் புள்ளி ­வி­வ­ரம் அல்ல. அவர்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை, தங்­களை நம்­பி­யி­ருக்­கும் குடும்­பத்­தி­னரை, விடை­ய­ளிக்­கப்­பட வேண்­டிய கேள்­வி­களை பின்­னால் விட்­டுச் செல்­கின்­ற­னர்," என்று திரு யோங் கூறி­னார்.

துவாஸ் வட்­டா­ரத்­தில் உள்ள ஸ்டார்ஸ் இஞ்­சி­னி­ய­ரிங் தொழிற்­சா­லை­யில் கடந்த பிப்­ர­வரி 24ஆம் தேதி வெடிப்பு ஏற்­பட்டு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மூன்று பேர் மர­ண­முற்ற சம்­ப­வம் மீதான பொது விசா­ரணை பற்­றி­யும் திரு யோங் குறிப்­பிட்­டார்.

அபாய அறி­கு­றி­க­ளைக் கண்­டு ­கொள்­ளா­தது, சாத­னங்­களை முறை­யா­கப் பயன்­ப­டுத்­தா­தது போன்ற கவ­லைக்­கு­ரிய பழக்­கங்­கள் அதில் தெரிய வந்­த­தாக அவர் கூறி­னார்.

பொது விசா­ரணை முடி­வு­களி லிருந்து பாடம் கற்று, நிறு­வ­னங்­கள் அபாய அறி­கு­றி­க­ளைப் புறக்­க­ணிக்­கா­மல், உயிரிழப்பு அல்லது கடும் விபத்து ஏற்படும் முன்னர் உண்­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கும் என்று நம்­பு­வ­தாக திரு யோங் குறிப்­பிட்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!