நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு மாற்றங்கள் உத்தேதிக்கப்பட்டு உள்ளன.
இப்போதைய நினவுச் சின்னங்களை இன்னும் சிறந்த முறையில் பாதுகாப்பதும் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படும் இடங்களின் வகைளை அதிகப்படுத்து வதும் மாற்றங்களின் நோக்கம்.
நினைவுச் சின்னங்களைப் பழமைகெடாமல் பாதுகாப்பு (திருத்தம்) மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கலானது.
அந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில், வரலாற்று அடையாளச் சின்னங்களைத் தன்னிடத்தே கொண்டிராத பாடாங் போன்ற இடங்களைத் தேசிய நினைவுச் சின்னங்களாக அரசிதழில் குறிப்பிட வழி ஏற்படும்.
தேசிய மரபுடமைக் கழகத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதும் மசோதாவின் நோக்கம்.
தேசிய நினைவுச் சின்னங்களில், அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைக்கும், பண்புகளைச் சிதைக்கும் வகையில் அங்கீகாரமற்ற வேலைகள் நடக்காமல் அவற்றைப் பாதுகாக்கவும் உத்தேச மாற்றங்கள் வழிகோலும்.