தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லியோங்: வெளி மிரட்டல்களைக் கையாள ஏற்கெனவே சட்டங்கள்

1 mins read
e554dfb2-74ec-47f3-b327-e531fa3e0dd0
-

வெளி மிரட்­டல்­க­ளைக் கையாள உள்­நாட்­டுப் பாது­காப்புச் சட்­டம், இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டம் போன்ற சட்­டங்­கள் அர­சி­டம் இருப்­ப­தாக தொகுதி­இல்­லாத நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய் நேற்று நாடாளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில், வெளி­நாட்டுத் தலை­யீட்­டுக்கு எதி­ரான புதிய சட்டம் ஏன் தேவை என்று அவர் கேள்வி எழுப்­பி­னார்.

வெளி­நாட்டுத் தலை­யீடு (தடுப்பு நட­வ­டிக்­கை­கள்) சட்­டம் நேற்று இரண்­டா­வது வாசிப்­புக்கு வந்­தது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய திரு லியோங், தன்­னு­டைய சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி, சிங்­கப்­பூர் விவ­கா­ரங்­களில் வெளி­நாட்டுத் தலை­யீட்டை கடு­மை­யாக எதிர்ப்­ப­தாகக் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் இந்த மசோ­தாவை அதன் இப்­போ­தைய வடி­வில் தனது கட்சி ஆத­ரிக்க இய­லாது என்­றார் அவர்.

மேலும் சட்­டங்­களை இயற்றி நம் சொந்த மக்­க­ளைக் கட்­டுப்­படுத்­து­வது, வெளி­நாட்டுத் தலை­யீட்டுக்கு எதி­ரான தலை­சி­றந்த பாது­காப்பு அல்ல.

அதற்குப் பதி­லாக, தேசிய பாது­காப்பு மிரட்­டல்­கள் பற்றி நம் மக்­க­ளிடையே புரிந்­து­ணர்வை மேம்­படுத்து­வ­து­தான் சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டார்.