பயணங்கள் முடிந்தன; விமானங்களுக்குப் பிரியாவிடை

பயணங்கள் முடிந்தன; விமானங்களுக்குப் பிரியாவிடை

1 mins read
ce4c5580-ca5d-4af8-abda-3065856e0c50
-

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் நேற்று முன்தினம் இரவு சாங்கி கண்காட்சி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் இரண்டு A380 ரக விமானங்களும் அடங்கும்.

இதன் காரணமாக சாங்கி கோஸ்ட் சாலை, ஏவியேஷன் பார்க் சாலை ஆகியவை சில மணி நேரம் மூடப்பட்டிருந்தன.

சாங்கி கண்காட்சி நிலையத்தில் இந்த விமானங்களின் பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு உள்ளூரிலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகங்களைப் பிரித்தெடுக்கும் பணிகள் இரண்டு மாதங்களுக்கு நடக்கும்.

சிங்கப்பூரில் A380 ரக விமானங்களின் பாகங்கள் பிரித்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்