முதியவருக்கு உதவிய கட்டுமான ஊழியர்

முதியவருக்கு உதவிய கட்டுமான ஊழியர்

1 mins read
91be8b16-bee0-40a0-bba0-1c4bbe0fd4ad
படம்: ஸ்டோம்ப் -

முதியவர் ஒருவருக்கு கட்டுமான ஊழியர் ஒருவர் தன்னலம் பாராது உதவுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

போத்தோங் பாசிரில் செயிண்ட் ஆன்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரிக்கு முன்னால் உள்ள கட்டுமானத் தளத்திற்கு அருகே திங்கட்கிழமை (அக்டோபர் 4) மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் பார்த்த மைக்கல் என்பவர், அதைக் காணொளி எடுத்தார்.

அட்டைப் பெட்டிகளைக் கொண்ட தள்ளுவண்டி ஒன்றை அந்தக் கட்டுமான ஊழியர் அந்த முதியவருடன் தள்ளிச் செல்வதை காணொளி காட்டியது.

தாம் இதுவரை கண்டுள்ள "அற்புதமான காட்சிகளில்" இதுவும் ஒன்று என மைக்கல் கூறுவதை அந்தக் காணொளியில் கேட்க முடிகிறது.