தவறான வழியில் வந்த ஒரு மில்லியன் வெள்ளி

1 mins read
4d95d928-775f-46b2-8d58-dfff708debcb
நீதிமன்ற வளாகத்தில் ஏனி ஃபூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தவறான வழியில் வந்த பெருந்தொகையை தனது வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டதை ஒரு பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

சட்ட நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்த 48 வயது ஏனி ஃபூங், ஓர் ஆடவருடன் நட்பு வைத்துக்கொண்ட பிறகு சிங்கப்பூரில் பல வங்கிக் கணக்குகளைத் திறந்தார்.

குற்றச் செயல்களின் வாயிலாக வந்த ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பெற அந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டன. இந்நடவடிக்கைகளை நிறுத்துமாறு போலிசார் பல முறை சொன்னபோதும் ஏனி தொடர்ந்து அவரது நண்பருக்கு உதவியிருக்கிறார். அப்போது அவர் மீது விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

குறைந்தது ஏழு குற்றச்சாட்டுகளை ஏனி ஒப்புக்கொண்டார். அடுத்த மாதம் அவருக்குத் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.