மாநாடு, கண்காட்சித் துறை உச்சநிலை கூட்டத்தை சிங்கப்பூர் ஏற்று நடத்தும்

'மைஸ்' எனப்­படும் கூட்­டங்­கள், ஊக்­கு­விப்­பு­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள் துறை­யில் உள்ள வட்­டா­ரத் தலை­வர்­கள் ஆண்­டு­தோ­றும் கலந்­து­கொள்­ள­வி­ருக்­கும் புதிய ஆண்டு உச்­ச­நி­லைக் கூட்­டத்தை சிங்­கப்­பூர் அடுத்த மூன்று ஆண்­டு­ க­ளுக்கு ஏற்று நடத்­தும்.

ஆசியா தலைமை நிர்வாகிகள் உச்­ச­நி­லைக் கூட்­டம் எனப்படும் அந்­தக் கூட்­டம் முதன்­மு­றை­யாக அடுத்த ஆண்டு தி ஃபுல்லர்ட்­டன் ஹோட்­ட­லில் நடை­பெ­றும். அதில் 150 வர்த்­த­கத் தலை­வர்­கள் கலந்து­ கொள்­வார்­கள். இவர்­களில் பாதி பேர் ஆசி­யா­வி­லி­ருந்­தும் மற்­ற­வர்­கள் அமெ­ரிக்கா, ஐரோப்­பா­வி­லி­ருந்­தும் வரு­வார்­கள்.

ஆசிய பசிஃ­பிக் வட்­டா­ரத்­தில் உள்ள 'மைஸ்' துறை­யில் சென்ற 2017ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட 230 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் வரு­வாய் ஈட்­டப்­பட்­ட­தாக 'இலிட் மாரக்­கெட் ரிச­ரச்' எனும் ஆய்வு நிறு ­வ­னம் கூறி­யுள்­ளது.

வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் அந்த வரு­வாய் 440 பில்­லி­யன் டால­ருக்கு மேல் செல்­லும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உச்­ச­நி­லைக் கூட்­டத்தை ஏற்று நடத்­து­வது குறித்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் 'சேக்­காஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் மாநாட்­டுக் கண்­காட்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் மற்­றும் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் சங்­கத்­து­ட­னும் அனைத்­து­லக 'மைஸ்' துறை அமைப்­பு­க­ளு­ட­னும் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் நேற்று கையெ­ழுத்­திட்­டது.

நிகழ்ச்­சி­யில் வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் கலந்­து­கொண்­டார்.

இவ்­வே­ளை­யில் 'கேஸ்­டெக்' எனப்­படும் எரி­சக்­தித் துறை மாநாட்டை வரும் 2023ல் இங்கு நடத்­து­வதன் தொடர்­பில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பு­ட­னும் 'டீஎம்ஜி இவெண்ட்ஸ்' எனும் நிகழ்ச்சி ஏற்­பாட்டு நிறு­வ­னத்­து­ட­னும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!