இந்திய சமூகத்துக்கு ஃபேர்பிரைஸ் ஆதரவு

கி.ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூர் இரண்­டா­வது ஆண்­டாக கிரு­மிப்­ ப­ர­வ­லுக்­கி­டையே தீபா­வ­ளி­யைக் கொண்­டும் தருணத்தில் ஒட்­டு­மொத்த சமூ­கமே ஒன்றிணைந்து ஒரு­வ­ருக்கொரு­வர் உதவி செய்து ­கொண்­டாட்ட உணர்­வைக் கட்­டிக்­காக்க வேண்டும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

"கிரு­மிப்­ ப­ர­வல் சூழ­லால் தீபா­வ­ளியை எப்­போ­தும்­போல கொண்டாட இய­லா­விட்­டா­லும் அதற்­குப் பின்­னால் இருக்­கும் தீபா­வளி உணர்­வைக் கட்­டிக்­காக்க முயற்சி செய்­ய­வேண்­டும். இருளை நீக்கி ஒளியை உண்­டாக்­கு­வது என்­பதே தீபா­வ­ளிக்­கு­ரிய அடிப்­படை கொண்­டாட்ட உணர்வு," என்று திரு ஈஸ்­வ­ரன், நேற்று பிற்­ப­கல் இரண்டு மணி வாக்­கில் தேக்கா மாலி­லுள்ள என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

என்­டி­யூசி ஃபேர்­பி­ரை­சின் அறப்பணிப் பிரி­வான ஃபேர்­பி­ரைஸ் அற­நி­று­வ­னம், சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­திற்கு 20,000 வெள்ளி வழங்­கும் நிகழ்ச்சி, அந்­தப் பேரங்­காடியில் நடை­பெற்­றது.

ஃபேர்பிரைஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு சியா கியன் பெங், சிண்­டா­ தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ர­னி­டம் காசோலை திரு ஈஸ்­வ­ரனின் முன்னிலையில் வழங்கினார்.

"தீமையை நன்மை வென்­ற­தைக் கொண்­டா­டும் தீபா­வ­ளியை, கிரு­மிப்­ ப­ர­வலை வெல்­வ­தற்­குத் தேவை­யான சமு­தாய ஒற்­று­மையை வளர்க்க நாம் பயன்­ப­டுத்த வேண்டும். பல்­வேறு சூழல்­கள் கார­ண­மாக சமுதாயத்­தில் மன உளைச்­ச­லால் பலர் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

குடும்­பத்­தி­னர், பணி­யா­ளர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், பணிப்­பெண்­கள் என ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஏதோ ஒரு­வித பாதிப்பு இருக்­க­லாம். இவர்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்டி, தைரி­யம் அளித்து கொண்­டாட்ட உணர்­வில் இவர்­க­ளை­யும் இணைத்துக்கொண்டால் தீபா­வ­ளி­ உணர்வை அது பிரதிபலிக்கும்," என்று கூறி­னார்.

விழா நேரங்­களில் சமூ­கப் பங்­கா­ளி­கள் அனை­வ­ரும் ஒன்­று­கூடி உத­வு­வது முக்­கி­யம் என்று சிண்­டா­ தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

"தனி­ம­னி­தர்­கள் முதல் என்­டி­யூசி போன்ற பெரு­நி­று­வ­னங்­கள் வரை அனை­வ­ரது பங்­க­ளிப்பும் சிங்­கப்­பூ­ரின் தனித்­தன்­மை­யைக் காட்­டு­கிறது. சிர­மத்­தில் இருக்­கும் மக்­கள், மனம் தளர வேண்­டாம் என்­ப­தைத் தெரி­விப்பதே இது போன்ற கூட்­டு­மு­யற்­சி­க­ளின் நோக்­கம். இது என்­றும் தொடர்­வது முக்­கி­யம்," என்று திரு அன்­ப­ரசு கூறி­னார்.

ஆண்­டு­தோ­றும் சுமார் $2 மில்­லி­யன் நிதி­யு­த­வியை மக்­க­ளுக்கு அளித்­து­வ­ரும் சிண்டா, தற்­போ­தையை கிரு­மிப்­ ப­ர­வ­ல் கார­ண­மாக, கடந்­தாண்­டைப் போலவே இந்த ஆண்­டும் $5.5 மில்­லி­யன் நிதி­யு­தவி மக்­க­ளுக்கு அளிக்­கப்­படும் எனத் தெரி­வித்­தார்.

சுமார் 1,900 குடும்­பங்­க­ளுக்­குப் பய­ன­ளிக்கும் சிண்­டா­வின் விழாக்­கால அன்­ப­ளிப்­புத் திட்­டம் உள்­ளிட்ட பல்­வேறு சமூக நலத்­திட்­டங்­களுக்கு என்­டி­யுசி வழங்­கிய தொகை பயன்­ப­டுத்­தப்­படும் என்று அவர் கூறி­னார்.

2011ஆம் ஆண்டு முதல் ஃபேர்­பி­ரை­சஸ் அற­நி­று­வ­னம், இவ்­வாண்­டின் தொகை உட்­பட மொத்­தம் 280,000 வெள்­ளிக்­கும் அதி­மான நிதியை சிண்­டா­வுக்கு அளித்­துள்­ளது.

சிண்­டா­வி­ட­மி­ருந்து சமூக மற்­றும் நிதி­யு­தவி பெற்­று­வ­ரும் பிள்­ளை­க­ளுக்கு இந்த நன்­கொடை பய­ன­ளிக்­கும். 2008ஆம் ஆண்­டில்­தொடங்கப்பட்ட அந்த அற­நி­று­வ­னம், இது­வரை சமூ­கத்­திற்கு 158 மில்­லி­யன் வெள்ளி நிதி­யு­த­வியை அளித்­த­து­டன் பல்­வேறு சமூக நலப் பணி­க­ளை­யும் நடத்­தி­யுள்­ளது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நிறை­வான தீபா­வளி அனு­ப­வத்தை வழங்­கு­வ­தற்­கா­கவே பேரங்­காடி, தனது பொருட்­க­ளுக்­கான தெரி­வு­களை விரிவுப்படுத்தியிருப்பதாக என்­டி­யுசி குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு சியா கியன் பெங் தெரி­வித்­தார்.

"தேக்கா பிளே­சில் உள்ள இந்­தப் பேரங்­கா­டி­யில் நாங்­கள் இந்­தி­யர்­கள் பயன்­ப­டுத்­தும் பொருட்­களை அதி­கம் தரு­வித்­துள்­ளோம். அத்­து­டன், அறி­விப்­புப் பல­கை­களில் தமி­ழைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளோம்.

இந்­தியா, மலே­சியா, இந்­தோ­னீ­சியா உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து பொருட்­கள் தரு­விக்­கப்­பட்­டுள்­ளன," என்று அவர் கூறி­னார்.

உடல் ஆரோக்­கி­யம் குறித்த விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­த­தால் பல்­வேறு ஆரோக்­கி­ய­மான பல­கா­ரங்­கள் தரு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக திரு சியா கூறி­னார். தேக்கா பிளே­சில் மட்­டு­மின்றி சிங்­கப்­பூ­ரி­லுள்ள பெரிய என்­டி­யுசி கிளை­களில் இந்­தப் பொருட்­கள் கிடைக்­கும் என்றும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!