ஏனி ஃபூங் வழக்கு: மேலும் சிலர் ஏமாற்றப்பட்டனர்

தவ­றான முறை­யில் தனது வங்­கிக் கணக்­கு­களில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை­யைப் பெற்ற ஏனி ஃபூங் வழக்­கில் மேலும் சில விவ­ரங்­கள் தெரி­ய­வந்­துள்ளன. இவர் 2016ஆம் ஆண்டு இணை­யத்­தில் தெரிந்­து­கொண்ட ஆட­வ­ரி­ட­மி­ருந்து சுமார் 3,800 வெள்ளியை மட்­டுமே பெற்­றி­ருக்­கி­றார். பிரிட்­ட­னைச் சேர்ந்த பொறி­யா­ளர் என்­றும் தனது பெயர் ஸ்டீவ் வில்­லி­யம்ஸ் என்­றும் அந்த ஆட­வர் அடை­யாளப்­ப­டுத்­திக்­கொண்­டார்.

ஏமாற்­றப்­பட்ட மற்ற சிலர் ஃபூங்கின் வங்­கிக் கணக்­கு­க­ளுக்­குப் பணம் அனுப்­பி­யது நீதி­மன்ற ஆவ­ணங்­களில் தெரி­ய­வந்­தது. அவர்­களில் மூவர் சிங்­கப்­பூ­ரில் இருப்­ப­வர்­கள். 2016ஆம் ஆண்­டின் கடைசிப் பகு­தி­யில் 200,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகையை ஃபூங்கின் வங்­கிக் கணக்­கு­களுக்கு அனுப்பி­யி­ருக்­கின்­ற­னர்.

ஏமாற்­றப்­பட்ட முதல் நப­ரான 59 வயது ஆட­வர் 2016ஆம் ஆண்டு அக்­டோ­பர் ஃபூங்கின் கணக்­கிற்கு 95,000 வெள்­ளியை அனுப்பி­யிருக்கி­றார்.

ஏமாற்றப்பட்ட மற்றொருவர் ஒரு 48 வயது பெண். ஃபூங்கிற்குச் சொந்தமான இன்னொரு வங்கிக் கணக்கிற்கு 34,500 வெள்ளியை அனுப்பினார்.

ஏமாற்றப்பட்ட மூன்றாவது நபர் ஓர் 69 வயது ஆடவர். அவர் 100,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை ஃபூங்கிற்கு அனுப்பியிருக்கிறார். தவறாக சிலரை நம்பியதால் மூவரும் பணம் கொடுக்க நேரிட்டது.

இவர்­க­ளைத் தவிர பொத்ஸ்­வானா நாட்­டில் இருக்­கும் வங்கி ஒன்­றும் ஏமாற்­றப்­பட்­டது. அடை­யா­ளம் தெரி­யாத நபர்­க­ளால் தனது கட்­ட­மைப்பு ஊடு­ரு­வப்­பட்­ட­தா­க­வும் தன்­னிடமி­ருந்து 445,500 வெள்­ளித் தொகை ஃபூங்கின் வங்கிக் கணக்குகளில் ஒன்றுக்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும் 2017ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் அந்த வங்கி சிங்­கப்­பூர் வர்த்­தகக் குற்ற விசா­ர­ணைப் பிரி­வுக்­குத் தக­வல் தெரி­வித்­தது.

தவறாக வந்த சுமார் 690,000 வெள்­ளித் தொகை­யைத் தனக்­கும் தனது மக­ளுக்­கும் சொந்­த­மான வங்­கிக் கணக்­கு­களில் பெற்­றுக்­கொண்­ட­தன் தொடர்­பில் ஏழு குற்­றச்­சாட்­டு­களை ஃபூங் ஒப்­புக்­கொண்­டார். தவ­றாக வந்த எஞ்­சிய தொகை தொடர்­பில் உள்ள மேலும் 38 குற்­றச்­சாட்­டு­கள் தீர்ப்­ப­ளிக்­கும்­போது கருத்தில்­ கொள்­ளப்­படும். ஃபூங்கிற்கு அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!